Aran Sei

உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் தொழுகைக்கு சென்ற முதியவர் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தக் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்ததற்காக, ட்விட்டர் நிர்வாகம், காங்கிரஸ் கட்சி தலைவர்கள், ஊடகவியலாளர்கள்மீது லோனி காவல்நிலையை துணை ஆய்வாளர் நரேஷ் ஷிங் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இரவு 11.20 மணிக்கு ஆல்ட்நியூஸ் இணையதளத்தை சேர்ந்த முகம்மது ஜூபைர் மற்றும் ராணா ஆயூப், தி வயர் இணையதளம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சல்மான் நிஜாமி, மஸ்கூர் உஸ்மானி, மற்றும் ஷாமா முகமது, எழுத்தாளர் சபா நக்வி மற்றும் சமூக ஊடகநிறுவனமான ட்விட்டர் இந்தியா கார்பரேஷன், ட்விட்டர் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கையைக் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

கும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (கலகத்திற்கான அத்திரமூட்டுதல்), 153 (A) (பல்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை உருவாக்குதல்), 295 (A) (மத உணர்வுகளை சீற்றப்படுத்தும் நோக்குடன் செயல்படுதல்), 505 (குறும்பு), 120 (B) 120 (B) (கிரிமினல் சதி) மற்றும் 34 (பொதுவான நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

ஜூன் 5 ஆம் தேதி காசியாபாத்தில் தொழுகைக்கு சென்ற முதியவர் தாக்கப்பட்டதாக தொடர்பான பகிரப்பட்ட காணொளியை அடிப்படையாக கொண்டு, தி வயர் செய்தி வெளியிட்டிருந்தது.

மைதிலி சிவராமன் (14 டிச. 1939 – 30 மே 2021) – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்

அந்தக் காணோளியில், அப்துல் சமத் என்ற 72 வயது முதியவர், ஜூன் 5 ஆம் தேதி தொழுகைக்கு சென்றபோது அவரை தாக்கிய கும்பல், அவரது தாடியை மழித்ததும் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக காவல்நிலையித்தில் ஜூன் 7 ஆம் தேதி, அளித்த சமத் அளித்த புகாரில்,  மதத்தின் காரணமாக தாக்கப்பட்டதாகவும், தாக்குதல்  நடத்தியவர்களால் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட நிர்பந்திக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் பர்வேஷ் குஜ்ஜார், கல்லு குஜ்ஜார் மற்றும் ஆதில் என மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

காசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்?

இது ஒரு தனிப்பட்ட பிரச்னை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் அவர்களது குடும்ப உறுப்பினரின் கருச்சிதைவுக்கு சமத் கொடுத்த ஒரு தாயத்து தான் காரணம் என நம்பியதால் அவரை தாக்கியதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்திருந்தனர்.

முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் விளக்கம் அளித்திருந்த போதிலும், ட்விட்களை பதிவிட்டவர்கள் அதை நீக்கவில்லை மற்றும் அதற்கான முயற்சியை ட்விட்டர் நிறுவனமும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

”சமூகத்தில் செல்வாக்கு படைத்தவர்கள்  அவர்களது கருத்தில் உண்மையை நிறுவ முயற்சிப்பார்கள். மேலும், தகவல்களை வழங்கும்போது தங்கள் விருப்பத்தைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் (குற்றம் சாட்டப்பட்டவர்கள்) சமூகத்தின் மீது கடமையுடையவர்கள். இந்த வழக்கில், ட்வீட்கள் சரிபார்க்கப்படவில்லை, இது உண்மையற்றதாக இருந்த போதிலும் சம்பவத்தின் காணொளி வகுப்புவாத கோணத்தைக் கொடுத்தது” என காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.

கிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது

மேலும், “இந்த ட்வீட்கள் சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டன. இந்த ட்வீட்கள் பதற்றத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே அச்சத்தையும் தூண்டின.” என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லோனி காவல்நிலையத்தின் நிலைய அதிகாரி, “முதியவர் ’ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்களை உச்சரிக்க நிர்ப்பந்திக்கப்படவில்லை என்றும், இது ’அந்நியர்கள்’ செய்த குற்றம் அல்ல என்றும், வாடிக்கையாளர்களின் ‘வருத்தம்’ தான் காரணம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இஸ்லாமியர்களும் உள்ளனர்” என அவர் கூறியுள்ளார்.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்