Aran Sei

லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் பகடி செய்யப்பட்ட விவகாரம் – மத்திய அரசின் மீது ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு

விவசாயிகள் போராட்டத்தில், ட்விட் போடச் செய்து, லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் நற்பெயரை மத்திய அரசு பணையம் வைத்திருக்கக் கூடாது என மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பையில் நேற்று (பிப்ரவரி 6) ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ் தாக்கரே, “இவர்கள் அனைவரும் பெரிய மனிதர்கள். அவர்களை ட்வீட் செய்யவும், ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தவும் கேட்டுகொள்ளப்பட்டிருக்கிறார்கள்… அரசாங்கம், இவர்களின் நற்பெயரை பணையம் வைத்திருக்கக் கூடாது” எனத் கூறியதாக  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட சச்சின் – எச்சரிக்கையாக பேச வேண்டும்  என சரத் பவார் அறிவுரை

”இது அரசாங்கத்துடன் தொடர்புடையது, நாட்டுடன் அல்ல. சீனா அல்லது பாகிஸ்தானிடமிருந்து வரும் ஆபத்தை எதிர்கொள்வது போல இல்லை” என அவர் தெரிவித்ததாக என்டிடிவி  குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குப் போராட்டத்திற்கு ஆதரவாகவும், போராட்டத்தைத் தவறாகக் கையாண்ட அரசாங்கம் தொடர்பாகவும் பிரபல பாப் இசை கலைஞர் ரிஹன்னா, நடிகை மியா கலீபா, சுற்றுசூழல் ஆர்வலர் கிரெட்ட தன்பெர்க் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்திற்கு எதிராக இந்திய பிரபலங்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

பாஜகவிற்கு எதிராக சமூகநீதி காக்க ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் – கி.வீரமணி வேண்டுகோள்

இந்திய பிரபலங்கள் பிதிவிட்ட ட்விட்கள் அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்பட்டது போல இருந்ததாகவும், குறிப்பாக இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையில் வெளிநாட்டினர் தலையிட வேண்டாமென அரசாங்கம் எச்சரித்தபிறகு பதிவிடப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம் – மாநிலத்திற்கு அதிகரித்த நிதிச்சுமை

”அரசாங்கம், அக்‌ஷய் குமார் போன்ற ஆட்களோடு நிறுத்தி இருக்க வேண்டும். லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பாரத  ரத்னா பெற்றவர்கள். அவர்கள் எளிய மனிதர்கள். அரசாங்கம் சொன்னதை கேட்டு ட்விட் செய்ததால் அவர்கள் இப்போது பகடிக்கு ஆளாகி இருக்கிறார்கள்” என மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்ததாக, என்டிடிவி கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்