Aran Sei

இந்த ஆண்டு வாங்கிய வாகனத்திற்கு கடந்த ஆண்டே அபராதம் – அதிகாரிகளின் அலட்சியமே காரணமென உரிமையாளர் குற்றச்சாட்டு

புதிதாக வாங்கப்பட்ட மோட்டார் சைக்கிளுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி கூறுகிறது.

நெல்லை மாவட்டம் முக்கூடலில் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக இரண்டு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். அம்பாசமுத்திரம் போக்குவரத்து (RTO) அலுவலகத்தில் வாகனத்திற்கான பதிவு எண்ணையும் பெற்றுள்ளார்.

தன்னுடைய புதிய வாகனத்தை நண்பருக்காக கொடுப்பதற்காக பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தபோது, சாலை விதிகளை மீறியதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவருடைய வாகனத்தின் மீது 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

பத்திரிகை சுதந்திரத்திற்கான தரவரிசையில் இந்தியா 142 வது இடம் – இந்துத்துவவாதிகளால் கேள்விக்குறியாகும் கருத்துரிமை என ஆய்வில் தகவல்

இந்தாண்டு வாங்கிய வாகனம் கடந்த ஆண்டு எவ்வாறு சாலை விதியை மீறி இருக்கும் என்று ஹரிஹரன்  கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்றும் தனது வாகனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த இளைஞர் வலியுறுத்தியுள்ளார்.

Source: Puthiya Thalaimurai

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்