Aran Sei

ரயில் மோதி உயிரிழக்கும் யானைகள் – அதிகபட்சமாக அசாமில் 62 யானைகள் மரணம்

டந்த 10 ஆண்டுகளில் ரயில் மோதி 186 யானைகள் உயிரிழந்துள்ளது, அதிகபட்சமாக அசாமில் 62 யானைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மனுவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில் மோதி 8 யானைகள் மரணம் – தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்

மேலும், அசாம், மேற்கு வங்கம், ஒரிசா, உத்தரகாண்ட் மாநிலங்களில் அதிகளவில் யானைகள் ரயில் விபத்தில் உயிரிழந்துவுள்ளதாகவும், தென்னக ரயில்வேயை பொருத்தவரையில் செங்கோட்டை – கொல்லம், கோவை பாலக்காடு, சேலத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் வழித்தடம் என இந்த மூன்று ரயில் வழித்தடங்களில் யானைகள் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, 2012-13 ஆண்டு அதிபட்சமாக இந்தியா முழுவதும் 27 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அந்த தகவலில் தெரியவந்துள்ளது.

தவ்ஹீத் ஜமாத்தை காலி செய்ய நிர்பந்தம் – சட்டத்தை மீறும் மத்திய அரசு

மேலும், அசாமில் 62 யானைகளும், மேற்கு வங்கத்தில் 57 யானைகளும், முறையே ஒடிசாவில் 27, உத்தரகாண்ட்டில் 14, கேரளாவில் 9, ஜார்கண்ட்டில் 7,தமிழ்நாட் டில் 5,கர்நாடகாவில் 3,திரிபுரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 1 யானை கடந்த 10 ஆண்டில் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளது.

யானைகள் பாதுகாப்பு திட்டத்திற்காக, மத்திய நிதி உதவி திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 213 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

source; poovulagin nanbargal

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்