Aran Sei

கொரோனா தடுப்பில் மோடியின் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை – சர்வதேச மருத்துவ இதழ் லான்செட் கண்டனம்.

கொரோனா தடுப்பில் மோடியின் நடவடிக்கை ‘மன்னிக்க முடியாதவை’ என சர்வதேச மருத்துவ ஆய்விதழ் லான்செட் விமர்சித்துள்ளது. இந்திய ஒன்றிய அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்குறித்து அந்த இதழ் வெளியிட்டிருக்கும் தலையங்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதை விட, ட்விட்டரில் விமர்சனங்களை அகற்றுவதில் இந்திய அரசு அதிக கவனம் செலுத்தியதாக, லான்செட் குற்றம்சாட்டியுள்ளது.

கொரோனாவை வெற்றி கொண்டதாக உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் முன்கூட்டியே அறிவித்தது, இந்தியா கொரோனா ஒழிப்பின் இறுதிகட்டத்தில் உள்ளது என ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தது போன்ற செயல்கள், மெத்தனத்திற்கும் போதிய தயாரிப்பின்மைக்கு காரணமாக அமைந்ததாக லான்செட் தெரிவித்துள்ளது.

‘ஆக்சிஜன் சிலிண்டர், மருந்துகளுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்’ – பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்

இரண்டாவது அலையின் ஆபத்து மற்றும் புதிய உருமாற்றம் பெற்ற வைரஸ் குறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்தும், பல மாதமாகத் தொற்று எண்ணிக்கை குறைந்து வந்ததை வைத்து, கொரோனாவை தோற்கடிப்பட்டது என, அரசு நினைத்ததாக தலையங்கத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று எச்சரிக்கைகளையும் மீறி, மத மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு அரசு அனுமதியளித்ததை லான்செட்  கடுடைமயாக விமர்சித்துள்ளது.

விழுப்புரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும் – என்.எல்.சி நிறுவனத்துக்கு ரவிக்குமார் வேண்டுகோள்

கொரோனா தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்ற அரசின் வெற்றிக் கொண்டாட்டம், தடுப்பூசி பிரச்சாரத்தின் வேகத்தைக் குறைத்தது என தலையங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தடுப்பூசி செலுத்துவதில் கட்டுப்பாடு, தடுப்பூசிகளின் தட்டுப்பாடு, மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மருந்துகள் கிடைக்காதது ஆகியவை காரணமாக நாட்டின் மக்கள் தொகையில் 2 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக லான்செட் மருத்துவ ஆய்விதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்