Aran Sei

பாஜக கூட்டணி கட்சியினரைச் சந்தித்த தேஜ் பிரதாப் யாதவ் – பிகாரில் ஆளும் கூட்டணிக்குள் குழப்பமா?

பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர், லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் அம்மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியைச் சார்ந்த ஜித்தன் ராம் மஞ்சஹியைச் சந்தித்துள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

வற்புறுத்தித் திருமணம் செய்தது தொடர்பாக 2020 ஆம் ஆண்டு 3336 கடத்தல் வழக்குகள் பதிவு – பீகார் காவல்துறை தகவல்

மேற்கு வங்கத்தில் தற்போது தான் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு சென்ற முகுல் ராய் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியுள்ள நிலையில், இதேபோன்று, பீகாரில் ஆளும் கூட்டணி கட்சியைச் சார்ந்த ஒருவர் இவ்வாறு சந்தித்துள்ளது ஊகங்களை கிளப்பியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

மேலும், பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியைச் சார்ந்த ஜித்தன் ராம் மஞ்சஹிக்கும் இடையே, பங்கா பகுதியில் மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து சர்ச்சை ஏற்பட்டதாகவும் என்.டி.டி.வி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் சரியாக கையாளப்படவில்லை – பீகார் காவல்துறை கூடுதல் இயக்குனர் அறிக்கை

இந்த குண்டுவெடிப்பு இந்தியாவிற்கு எதிரான பிரிவினைவாதிகளின் நடவடிக்கை என்று பாஜக தெரிவித்ததைக் குறித்து, “அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு சமூகத்தைக் குறிவைப்பது சரியானதல்ல.” என்று ஜித்தன் ராம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜித்தன் ராம் மஞ்சஹி,
சகோதரரே, இத்தகைய மனநிலையிலிருந்து வெளியேறுங்கள். தேசத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இது நல்லதல்ல. பாங்கா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணையை நாங்கள் கோருகிறோம் என்று தெரிவித்திருந்ததாகவும் என்.டி.டி.வி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பீகார் சட்டமன்றத்தில் காவல்துறை சிறப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு – தாக்கப்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள்

இந்நிலையில், தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் ஜித்தன் ராம் மஞ்சஹி இடையான இந்த சந்திப்பு சர்ச்சையை எழுப்பியுள்ளதாகவும் என்.டி.டி.வி செய்தியில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள பாஜகவைச் சார்ந்த சுஷில் குமார் மோடி, பேச்சுவார்த்தை நடத்தாமல் பொதுவெளியில் எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்றும்,”தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு ஜனநாயகக் கூட்டணி, எனவே அனைத்து அரசியல்வாதிக் கட்சிகளும் மக்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள்குறித்து வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கலாம்”, என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்