கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் இருந்து அண்மையில் விடுதலையான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நேற்று (மே 4) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள அவரது மூத்த மகள் மிசா பார்தியின் இல்லத்திற்கு வந்தபிறகு, செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள லாலு பிரசாத் யாதவ், மத வழிபாட்டுதலங்களில் ஒலிபெருக்கி அகற்றப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
“மசூதிகளில் ஒலிபெருக்கிகளைத் தடை செய்ய வேண்டும் என கோருபவர்கள் நம் நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கின்றனர். நீங்கள் ஏன் மசூதிக்கு அருகில் சென்று ஹனுமான் சாலிசா பாட விரும்புகிறீர்கள்? நீங்கள் ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்ய விரும்பினால், அதை உங்கள் கோவிலில் செய்யுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், “வேண்டுமென்றே மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் செயல். இதற்கு மக்கள் எதிர்வினையாற்றுவார்கள். அதனால், வகுப்புவாத மோதல்கள் ஏற்படும். இது நாட்டுக்கு நல்லதல்ல. மிகவும் ஆபத்தானது” என்று லாலு பிரசாத் யாதவ் எச்சரித்துள்ளார்.
Source: Times of India
தோத்துப்போன பாஜக அலறும் Gangai Amaran
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.