Aran Sei

‘சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்துவது சாத்தியமற்றது’ – ஒன்றிய அரசின் முடிவு அரசியல் நோக்கமுடையது என மாயாவதி கண்டனம்

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்துவது சாத்தியமானதாக இருக்காது என்று ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததற்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதியும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ள மாயாவதி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மறுத்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இது  பாஜகவின் தேர்தல் நலன்களுக்காக  பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியலைக் கையாள்வதையும், அவர்களின் வாக்கிற்கும்,செயலுக்குமான இடைவெளியையும்  காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஒன்றிய அரசு சாதிவாரிக் கணக்கெடுபை மறுத்திருப்பதன் காரணமாக மொத்த சமுகத்தையும், அவர்களின் எதிர்காலத்தையும்  கேள்விக்குறியாகியுள்ளது. இது அவர்களுக்கானப் பணிவாய்ப்பை வழங்காமல் காயப்படுத்தியது போன்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இதே போன்று ட்விட்டர் வாயிலாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ள லாலு பிரசாத் யாதவ், “ஆர்.எஸ்.எஸ்சும் பாஜகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஏமாற்றுகிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ  6௦ விழுக்காட்டுக்கும் அதிகமான  மக்கள் தொகையைக் கொண்ட அவர்களுக்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் அட்டவணை ஒதுக்க முடியாது என்பது குறித்துஅரசு தங்களை நினைத்து வெட்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

SOURCE:THE INDIAN EXPRESS

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்