Aran Sei

லட்சதீவைக் காக்க 12 மணிநேர உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் – போராட்டக் குரல் அரசை எட்டுமென மக்கள் நம்பிக்கை

ட்சத்தீவில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களுக்கு எதிராக இன்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை அப்பகுதியைச் சார்ந்த ஏறத்தாழ 70,000 பேர் 12 மணிநேர உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

லட்சத்தீவில் யூனியன் பிரதேச அரசால் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களுக்கு எதிராக 12 மணிநேரம் உண்ணாநிலை  போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ‘லட்சத்தீவைக் காப்போம் குழு’ கடந்த ஜூன் 3 அன்றுஅறிவித்திருந்தது.

கல்வி அமைச்சகத்தின் செயல்திறன் தரவரிசை அட்டவணையில் பஞ்சாப்,தமிழ்நாடு ,கேரளா முன்னிலை – எட்டாம் இடம் பெற்று பின்னடைவை சந்தித்த குஜராத்

இதுகுறித்து தெரிவித்துள்ள லட்சத்தீவைக் காப்போம் குழுவினர், அவசர உதவிகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதாகவும், மக்கள் வீட்டிலேயே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

இந்நிலையில், பொது இடத்தில் கூட்டம் கூடினால் தொற்று நோய் சட்டங்களின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று யூனியன் பிரதேச நிர்வாக அலுவலர் பிரபுல் படேல் எச்சரித்துள்ளதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவன்: காஷ்மீரை சிறையாக்கியதோடு குழந்தைகளையும் அரசு குறிவைக்கிறதென மெஹபூபா முப்தி கண்டனம்

இதுகுறித்து தெரிவித்துள்ள லட்சத்தீவைக் காப்போம் குழுவைச் சார்ந்த யூசிகே தங்கல், “எல்லா தீவுகளிலும் முதன்முறையாக இத்தகைய போராட்டம் நடைபெறுகிறது. இதன் வழியாக அரசின் பாகுபாடான மற்றும் பிற்போக்கு முடிவுகள் குறித்து நிர்வாகிகள் எங்கள் குரலைக் கேட்கக் கூடும்” என்று கூறியுள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

லட்சத் தீவு மனிதர்கள் வசிக்காத 11 தீவுகள் உட்பட 37 தீவுகளைக் கொண்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்