Aran Sei

திரைக்கலைஞர் ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கு – திரும்பப் பெற மறுத்த தீவு நிர்வாகம்

ட்சத்தீவைச் சார்ந்த திரைக்கலைஞர் ஆயிஷா சுல்தானா விசாரணைக்கு ஒத்துழைக்க வில்லை என்றும் பணப்பரிமாற்றம் வெளிப்படையாக இல்லை என்று தீவு நிர்வாகம் கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அவர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்ப பெற தீவு நிர்வாகம்  மறுத்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை – ஒன்றிய அரசு: பிரதமரே உங்களின் மனசாட்சி எங்கே? – சித்தார்த்

ஆயிஷா மீது  லட்சத்தீவு நிர்வாகம் பதிவு செய்த தேசத்துரோக வழக்குக்கு எதிராக  முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என  கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் லட்சத் தீவு நிர்வாகம் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

ஆயிஷா தீவு நிர்வாகம் கொண்ட வந்துள்ள சட்டங்கள் தொடர்பாக விமர்சிக்கும் வகையில் தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் பேசியதற்கு எதிராக  அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிந்தது  குறிப்பிடத்தக்கது.

பெகசிஸ் தாக்குதல்  இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலின்றி நடந்தேறி இருக்க முடியாது – சிவ சேனா குற்றச்சாட்டு

இந்நிலையில், இந்த மனுவில் ஆஜரான வழக்கறிஞர், “அவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த பிறகு காவல்துறையின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். ஊடகங்களிலும் காவல்துறைக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்” என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்