Aran Sei

லட்சத்தீவுகள் விவகாரத்தில் குடியரசுத் துணைத் தலைவர், கேரள ஆளுநர் தலையிட வேண்டும் – லட்சதீவுகள் முன்னாள் நிர்வாகி கடிதம்

ட்சத்தீவு விவராகத்தில் இந்தியக் குடியரசுத் துணைத்  தலைவர் வெங்கையா நாயடு, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் தலையிட வேண்டும் என லட்சத்தீவின் முன்னாள் நிர்வாகி வஜாஹத் ஹபிப்புல்லா, தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மோகனி கிரி, முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் சையத் ஹமீட் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் எழுதியிருக்கும் கடிதத்தில், “முன்மொழிவுகளை மறுஆய்வு செய்யவும், உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசிக்கவும் வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தாருண் தேஜ்பால் விடுதலை – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்

”முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் ’மனித சமூகத்திற்கான நலனுக்காக’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. திட்டங்கள் மேலிருந்து திணிக்கப்படுதை விட ஒரு ஆலோசனை அணுகுமுறையைக் கருத்தில் கொள்ளும் தொலைநோக்கு தேவை” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒருதலைபட்சமாகவும், தன்னிச்சையாகவும் முன்மொழியப்பட்ட” சமீபத்திய கொள்கை மாற்றங்கள், நில உடைமை, கடல் வளபயன்பாடு மற்றும் சமூகத்தின் வாழ்வாதார நடைமுறைகள் போன்ற விஷயங்களில் எந்த பரிசீலனையும் கொடுக்கவில்லை என அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

‘கொரோனா மருந்துகளுக்கான வரியை நீக்க வேண்டும்’ – பாஜக ஆளாத ஏழு மாநில அரசுகள் கூட்டாக வலியுறுத்தல்

”லட்சத்தீவு மக்களை மேலும் அவமதிக்கும் வகையில், அவர்களின் கலாச்சாரம், மரபுகள், உணவு நெறிமுறைகள் (மாட்டிறைச்சி தடை, மதுபானக் கடைகள் திறப்பது) ஆகியவற்றில் தலையீடு செய்வதன் மூலம் மீறப்பட்டுள்ளன. ஜனநாயக அதிகாரப் பரவலாக்கத்தை முடிவு செய்யும் அவர்களின் பாரம்பரிய முறைகள், இந்த மாற்றங்களால் கிழித்தெறியப்பட உள்ளன,” என்று அந்தக் கடிதம் கூறுகிறது.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்