லட்சத்தீவு நிர்வாகத்தின் புதிய விதிகளுக்கு கடும் எதிர்ப்புகள் வருவதை தொடர்ந்து, லட்சத்தீவுகளின் சட்ட வரம்ப கேரள உயர்நீதிமன்றத்தில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற லட்சத்தீவுகள் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தீவுகளின் புதிய நிர்வாகி பிரபுல் கோடா பட்டேலின் முடிவுகளுக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ப்பட்டுள்ள நிலையில், நிர்வாகத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்
டிசம்பர் மாதம் புதிய நிர்வாகியாக பொறுப்பேற்ற பிரபுல் பட்டேல் எடுத்த, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை திருத்தியமைத்தல், ’குண்டர் சட்டத்தை’ அறிமுகப்படுத்துதல், சாலைகளை அகலப்படுத்துவதற்காக மீனவர்களின் குடிசைகளை இடித்தல் ஆகிய முடிவுகளுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
லட்சத்தீவுகளின் நிர்வாகியாக இருந்த தினேஷ் சர்மா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து அவருக்குப் பதிலாக புதிய நிர்வாகியாக தாமன் மற்றும் டையூவின் நிர்வாகியான பிரபுல் கேடா பட்டேலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
புதிய நிர்வாகி பிரபுல் பட்டெல், தீவுகளின் காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக 11 ரிட் மனுக்கள் உள்ளிட்ட 23 மனுக்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘ஒடுக்குமுறைக்கெதிராகப் பாடுபடக்கூடியவர்கள் தேசவிரோதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்’ – தேவங்கனா கலிதா
இதனை தொடர்ந்து தீவுகளின் சட்ட வரம்பைக் கேரள உயர்நீதிமன்றத்திலிருந்து கர்நாடக நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான முன்மொழிவை நிர்வாகம் செய்துள்ளது.
இந்த முன்மொழிவு குறித்த கேள்விகளுக்கு நிர்வாகியின் ஆலோசகர் ஏ. அன்பரசு பதிலளிக்கவில்லை.
”இது சரியான நடவடிக்கை அல்ல. நாங்கள் மொழி பத்திரத்தைப் பகிர்ந்துக் கொள்ளும்போது அவர்கள் எப்படி அதிகார வரம்பை மாற்ற முடியும். நீதிமன்ற ஆவணங்கள் மலையாள மொழியில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.” என லட்சத்தீவுகளை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் சி.என். நுரூல் ஹிடியா தெரிவித்தார்.
பெரும்பாலான மக்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள். ஏனெனில் இது நீதி மறுப்பிற்கு வழி வகுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
‘ஈஷா மையத்தை அரசுடைமை ஆக்க வேண்டும்’ – தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்த தெய்வத் தமிழர் பேரவை
கேரள உயர்நீதிமன்றம் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றம் 1000 கிலோமீட்டர் தொலைவில் எந்த வித நேரடி தொடர்பும் இல்லாமல் உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஹிடியா கூறினார்.
தற்போது விசாரணையின் கீழ் உள்ள அனைத்து வழக்குகளும் மீண்டும் புதிதாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதால், உயர் நீதிமன்றத்தை மாற்றுவது கருவூலத்தின் மீது கூடுதல் சுமையைக் குறிக்கும் என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.