Aran Sei

சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் லட்சத்தீவின் புதிய நிர்வாகி : வீடுகளில் கருப்புக் கொடி எந்தி எதிர்ப்பு தெரிவிக்க போராடும் மக்கள் முடிவு

ட்சத்தீவின் புதிய நிர்வாகியின் சுற்றுப்பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி போராடவுள்ளதாக லட்சத்தீவு மக்கள் அறிவித்துள்ளனர்.

லட்சத்தீவுகளின் புதிய  நிர்வாகி பிரபுல் கே பட்டேல் முன்மொழிந்துள்ள சட்ட திருத்தங்கள் அந்த மக்களுக்கு எதிராகவும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும் இருக்கிறது என குற்றம்சாட்டும் தீவின் மக்கள். இதற்கு எதிராக போராட்டக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

மக்களுக்கு எதிராக எதேச்சதிகாரத்துடன் செயல்படும் நிர்வாகியை இந்திய ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் பிபி முகமது பைசல் கடிதம் எழுதியுள்ளார்.

லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக மலையாளத் திரைக்கலைஞர் பிருத்விராஜ், கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து இருந்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 14), மக்களின் போராட்டங்களுக்கு மத்தியில், லட்சத்தீவில் ஒரு வாரம் நிர்வாக ரீதியிலான சுற்றப்பயணத்தை பிரபுல் கே பட்டேல் தொடங்க உள்ளார். இந்த சுற்றுப்பயணம் ஜூன் 20 ஆம் தேதி முடிவடைகிறது.

நிர்வாகி பிரபுல் கே பட்டேலின் வருகையின் போது தீவுவாசிகள் கறுப்பு முகக்கவசங்களை அணிந்து, வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவுள்ளதாக போராடும் லட்சத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

‘லட்சத்தீவு மக்களின் உணவு, மத நம்பிக்கைகளை குறிவைக்கும் சட்டத்திருத்தங்கள் கவலையளிக்கிறது’ – முன்னாள் அரசு ஊழியர்கள் பிரதமருக்கு கடிதம்

இதுதொடர்பாக பேசிய லட்சத்தீவை காப்போம் அமைப்பின் தலைவர், “அவர் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், எங்கள் பிரதிநிதிகள் அவரை சந்திப்பார்கள். முன்மொழியப்பட்ட சட்டத்திருத்தங்களான லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை (எல்டிஏஆர்), லட்சத்தீவு சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு ஒழுங்குமுறை (பிஏஎச்ஏ அல்லது குண்டர் சட்டம்) மற்றும் லட்சத்தீவு விலங்கு பாதுகாப்பு ஒழுங்குமுறை (எல்ஏபிஆர்) ஆகியவற்றை நீக்க வேண்டும் என்பதே எங்கள் முக்கிய கோரிக்கைகள்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எங்கள் கோரிக்கையை பிரபுல் கே பட்டேல் ஏற்றுக்கொண்டால், நாங்கள் நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்