Aran Sei

‘என்னை தேசதுரோகியாக சித்தரிக்க லட்சத்தீவு நிர்வாகம் முயல்கிறது’ – காவல்துறையின் குற்றச்சாட்டிற்கு திரைக்கலைஞர் ஆயிஷா மறுப்பு

ட்சத்தீவு நிர்வாகம் தன்னை தேசவிரோதியாகச் சித்தரிக்க வேகமாக முயன்று வருகிறது  என்று,  அத்தீவைச்  சார்ந்த திரைக்கலைஞர் ஆயிஷா சுல்தானா கேரளா உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளதாக  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘வேண்டும்.. வேண்டும்.. நீதி வேண்டும்..’ – நாடாளுமன்றத்தில் தமிழில் முழங்கிய எதிர்கட்சிகள்

திரைக்கலைஞர் ஆயிஷா சுல்தானா காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்  என்று அத்தீவு நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்ததற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி  கூறுகிறது.

மேலும், ஆயிஷா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், அவரது தொலைபேசியில் உள்ள பல தகவல்களை அழித்துவிட்டதாகவும், காவல்துறை கேட்ட பல ஆவணங்களைத்அவர்   தர மறுக்கிறாரென  காவல்துறை  நீதிமன்றத்தில்  கூறியிருந்ததாகவும்  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவித்துள்ளது.

வீடற்றவர்களுக்கும் தடுப்பு மருந்து செலுத்த வேண்டும் – பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் காவல்துறையின் குற்றச்சாட்டுகள்குறித்து நீதிமன்ற அமர்வு முன் பதிலளித்த ஆயிஷாவின் வழக்கறிஞர், “அவர் அவரது தொலைபேசியிலிருந்து எந்தத் தகவலையும் அழிக்கவில்லை.  மேலும், காவல்துறை எவ்வித  முன் அறிவிப்புமின்றி அவரது தொலைபேசியைப் பறிமுதல் செய்துவிட்டது” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில்  கூறுகிறது.

கடந்த ஜூன் 25 அன்று ஆயிஷாவின் தொலைபேசிமற்றும்  அவரது சகோதரனின் மடிக்கணினி காவல்துறையால்  கைப்பற்றப்பட்ட நிலையில், ஜூலை 15 அன்று விசாரணை நீதிமன்றத்தின் முன்பு அவை சமர்ப்பிக்கப்பட வில்லை என்று நீதிமன்ற அமர்வு முன்பு  அவர்  தெரிவித்துள்ளதாகவும்   தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 10 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகி உள்ளது – ஒன்றிய அமைச்சர் மாநிலங்களவையில் தகவல்

மேலும், ஆயிஷாவின் அனைத்து ஆவணங்களின் வண்ண நகலும் விசாரணை அதிகாரியிடம்  சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது கடவுச்சீட்டை சமர்பிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்று   அவரது வழக்கறிஞர்   குறிப்பிட்டுள்ளதாகவும்  அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ,”ஆயிஷா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை  என்று காவல்துறை பொய் கூறி வருகிறது. மேலும், நீதிமன்றத்தைத் திசைதிருப்ப முயல்கிறது” என்று அவரது வழக்கறிஞர் உயர்நீதிமன்ற அமர்வு முன்பு கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கிறது.

‘மிஷன் உ.பி, உத்தரகண்ட், லக்னோவை டெல்லியாக மாற்றுவோம்’ – அடுத்தக்கட்ட திட்டங்களை அறிவித்த போராடும் விவசாயிகள்

மேலும், தனது நடவடிக்கைகள் தேசவிரோதமானவை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவது அபத்தமானது  என்று ஆயிஷா குறிப்பிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்