Aran Sei

சுற்றுலாத்துறையில் 813 கோடி மதிப்பில் ஏல அறிவிப்பை வெளியிட்ட லட்சத்தீவு நிர்வாகம் – புறக்கணிக்கப்படுகிறதா மக்களின் போராட்டம்?

ட்சத்தீவுகள் பகுதியில் நடந்து வரும் போரட்டங்களுக்கு மத்தியில், அத்தீவு நிர்வாகம் சுற்றுலாவிற்கான கட்டமைப்புகள் கட்ட 813 கோடி மதிப்பிலான  திட்டத்திற்கான உலகளாவிய ஏலத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து லட்சத்தீவு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 23௦ கடற்கரையோர வீடுகள் மற்றும் 140 நீர்நிலை வீடுகள் என மொத்தமாக 370 அறைகள் கடமத், மினிகாய், சுஹேலி தீவுகள் ஆகிய மூன்று தீவுகளில் கட்டுவதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

மேலும், இந்த வீடுகளுக்கான கட்டுமானப்பணிகள் மூன்று ஆண்டுகள் உட்பட  75 ஆண்டுகள் பொது- தனியார் கூட்டாக பராமரிப்பு  மேற்கொள்ளும் வகையில்  லட்சத்தீவு நிர்வாகம் இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மினிகாய் தீவில் 110  கடற்கரை வீடுகளும், 40 நீர்நிலை வீடுகளும் கட்டுவதற்கு மொத்தமாக  319 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதே போன்று கடமத்,சுஹேலி தீவுகளில் மொத்தமாக 110 வீடுகள் கட்ட 247 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது .

தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட 2,035 சிறார்கள் – தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தகவல்

மேலும், பொது-தனியார் கூட்டணி  அடிப்படையில் வடிவமைப்பு, கட்டமைப்பு, நிதி, செயல்பாட்டின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக  அத்தீவு நிர்வாகம் கூறியுள்ளது.

source; THE NEW INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்