Aran Sei

லக்கிம்பூர்கெரி வன்முறை: பாஜகவினரை கொன்றதாக 4 விவசாயிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல்துறை

2020 அக்டோபர் 3 ஆம் தேதி லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையின்போது பாஜகவைச் சேர்ந்த 2 தொண்டர்கள் மற்றும் ஒரு ஓட்டுநரை அடித்துக் கொன்றதாக 4 விவசாயிகள் மீது உத்தரபிரதேச காவல்துறை நேற்று (ஜனவரி 21) குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

பாஜக தொண்டர்களான சுபம் மிஸ்ரா மற்றும் ஷியாம் சுந்தர் நிஷாத் மற்றும் கார் ஓட்டுநர் ஹரி ஓம் மிஸ்ரா ஆகியோரைக் கொன்றது தொடர்பாக 4 விவசாயிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப் பட்டுள்ளது.

குர்விந்தர் சிங், கமல்ஜீத் சிங் மற்றும் குர்ப்ரீத் சிங் ஆகிய 3 விவசாயிகள்  மீது இந்தியத் தண்டனைச் சட்டப்படி கொலை, கடுமையான காயம், கலவரம் மற்றும் சட்டவிரோதமாக ஒன்றுகூடல் ஆகிய பிரிவுகளின் கீழ் குடம் சுமத்தப்பட்டுள்ளது. விசித்ரா சிங் என்ற விவசாயி மீது லஞ்சம் வழங்குதல், கிரிமினல் மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மதங்களும் அமைதியாக வாழும் இந்தியாவைத்தான் நேதாஜி கனவு கண்டார் – நேதாஜி மகள் கருத்து

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள 4 விவசாயிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட விவசாயச் சட்டங்களுக்கு எதிரான அக்டோபர் 3 அன்று லக்கிம்பூர் கெரியில் நடந்த போராட்டத்தின்போது மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் விவசாயிகள் ஆவர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்