Aran Sei

‘பாஜகவை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம்’ – போராடும் விவசாயிகளின் கூட்டமைப்பு

விவசாயிகளின் போரட்டத்தைத் திருப்பும் விதமாக தேர்தல் பிரச்சாரங்கள் உள்ளது எனவே அதிலிருந்து விலக வேண்டுமென வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின்  போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவ்வமைப்பினர், “நாங்கள் இதை விவசாயிகளுக்கு எதிரான சதி என்றேக் கூறுவோம். இது  பல மாதங்களாக நடந்து வரும் விவசாயிகளின் போரட்டத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகும். ஒருவேளை விவசாயிகள் போரட்டத்தின் மீது உண்மையாகவே ஆதரவு கொண்டிருப்பின், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலக வேண்டும்” என்றும் கூறியுள்ளனர்.

மேலும், பாஜக தலைவர்களுக்கு எதிரானப் போராட்டத்தை அதிகப்படுத்தி தோற்கடிக்கவுள்ளதாகவும் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஹரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் அம்மாநில முதலமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதேபோன்று, ஹிமாச்சல பிரதேச மாநில விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல்  சில்லைப் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் பங்கேற்கக்கூடாதெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பஞ்சாபின் மோகா பகுதியில் சிரோமணி அகலித் தளத்தின் கூட்டத்தின்  போது போராட்டம் நடத்திய விவசாயிகள் போடப்பட்ட வழக்குகளை வரும் செப்டம்பர் 8 ஆம் தேதிக்குள் திரும்ப பெறாவிட்டால் பெருமளவிலான போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது, வரும் செப்டெம்பர் 5 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசபர்நகரில் “மகா பஞ்சாயத்து” கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

source: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்