Aran Sei

லக்கிம்பூர் வன்முறை – உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது மட்டுமே இயல்பு மற்றும் அமைதியை மீட்டெடுக்க ஒரே வழி என்பதை பாஜக உணர வேண்டும் என்று உத்தர பிரதேச கலவரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் அக்டோபர் 3 ஆம் தேதி விவசாய சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது நடந்த கலவர் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கியுள்ளனர்.

லக்கிம்பூர் வன்முறை – அதிர்ச்சியளிக்கும் காணொளி வெளியிட்ட பாஜக எம்.பி. வருண் காந்தி

அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள்மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலுக்குக் காரணமான ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும், அவரது மகன்மீது கொலை முயற்சி வழக்குத் பதிய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு செல்ல முயன்ற ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பண்டோரா பேப்பர்ஸ் தகவல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் – ஒன்றிய அரசு அறிவிப்பு

இந்த வன்முறை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், “விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் உத்தர பிரதேச விவசாயிகள்மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் மரணம்குறித்து பாரபட்சமற்ற, உயர்மட்ட விசாரணையைக் கோரிய மு.க.ஸ்டாலின், இந்தக் கொடூரச் செயலைச் செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

விவசாயிகளைச் சந்திக்க முயன்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்’– வைகோ வலியுறுத்தல்

மேலும், “விவசாயிகளின் கவலைகளுக்கு ஒன்றிய அரசு இனி அக்கறையற்றதாக இருக்க முடியாது. மேலும், இந்த அசம்பாவிதங்கள் தொடரக் கூடாது. மொத்தத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது மட்டுமே இயல்பு மற்றும் அமைதியை மீட்டெடுக்க ஒரே வழி என்பதை பாஜக உணர வேண்டும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்