Aran Sei

லக்கிம்பூர் வன்முறை: ஆஷிஷ் மிஸ்ராவை 14  நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

க்கிம்பூர் வன்முறையில் கொலை குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அரசின் உள்துறை இணைஅமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 14  நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் 3 ஆம் தேதி, உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள்மீது கார் ஏற்றியது தொடர்பாக விவசாயிகள் அளித்த புகாரின் பெயரில் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில், 4 விவசாயிகள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

பூங்காவிற்கு ஸ்டான் சுவாமி பெயர் வைக்க வலது சாரிகள் எதிர்ப்பு – முடிவை ஒத்திவைத்த மங்களூரு கல்லூரி நிர்வாகம்

அக்டோபர் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகமாறு ஆஷிஷ் மிஸ்ராவிற்கு அனுப்பப்பட்டிருந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் அன்றைய தினம் ஆஜராகவில்லை.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 7 ஆம் தேதி இரண்டு பேரை உத்திரபிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆஷிஷ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டை மறுக்கும் அவரது தந்தை அஜய் மிஸ்ரா, “சம்பவ இடத்தில் ஆஷிஷ் மிஸ்ரா இல்லை என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. ஒருவேளை ஆஷிஷ் மிஸ்ரா அங்கிருந்தால் அவரைக் கொன்றிருப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக் கைதிகளை பல ஆண்டுகள் சிறையில் அடைத்தால் விசாரணை எதற்கு? – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கேள்வி

இந்தச் சம்பவத்தின்போது கலவரம் விளைவிக்கும் சக்திகள், விவசாயிகள் போர்வையில் பாஜகவினரை தாக்கியுள்ளனர் என அமைச்சர் அஜய் மிஸ்ரா குற்றம்சாட்டியிருந்தார்.

ஆஷிஷ் மிஸ்ராவை  11 மணிநேர விசாரணைக்குப் பிறகு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தினர். பிறகு மிஸ்ராவை 14  நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்