Aran Sei

லக்கிம்பூர் வன்முறை: ‘பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்’ – விவசாயிகள் எச்சரிக்கை

பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகாயத் மற்றும் 23 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று (மே 5) உத்தரப் பிரதேச மாநில லக்கிம்பூர் மாவட்ட  நிர்வாகத்தை சந்தித்து, கடந்த ஆண்டு நடந்த லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுடைய கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி நடந்த வன்முறையில் 8 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட எட்டு பேரில், நான்கு விவசாயிகளும் அடங்குவர். ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஷிஷ் மிஸ்ரா பயணித்த கார், விவசாயிமீது ஏறியதில் அந்த விவசாயிகள் உயிரிழந்தனர். இவர்களோட, இரு பாஜக தொண்டர்கள், ஒரு கார் ஓட்டுனர், ஒரு பத்திரிகையாளரும் உயிரிழந்தனர்.

இரண்டு பாஜககாரர்கள் மற்றும் ஓட்டுனர் கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் நான்கு விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களையும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஒன்றிய அமைச்சர் மகனுக்குப் பிணை மறுத்த உச்ச நீதிமன்றம் – நீதித்துறை மீது நம்பிக்கை இருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து

அதைத்தொடர்ந்து, லக்கிம்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் மகேந்திர பகதூர் சிங், காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகள் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

லக்கிம்பூர் மாவட்ட அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் திகாயத், “காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தகுதியான உறுப்பினருக்கு அரசு வேலை உள்ளிட்ட நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து பேசினோம். அவற்றை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரினோம்” என்று கூறியுள்ளார்.

இக்கோரிக்கைகள் தொடர்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி விவசாயிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக அமைச்சரின் மகனால் கொல்லப்பட்ட விவசாயிகள் குறித்து ‘லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ என படம் எடுக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ்

“இந்த வன்முறைக்கு காரணமான ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டம் நடத்துவோம்” என்று ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

Source: PTI

நாயன்மார்களே பல்லக்குள போகல உங்களுக்கு என்ன? | Surya Xavier Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்