Aran Sei

லக்கிம்பூர் வன்முறை – குடியரசுத் தலைவரைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்

லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த்திடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

அக்டோபர் 3 ஆம் தேதி, உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள்மீது கார் ஏற்றியது தொடர்பாக விவசாயிகள் அளித்த புகாரின் பெயரில் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில், 4 விவசாயிகள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

‘தமிழ்நாடு அரசின் குடிசைப் பகுதி மக்களுக்கான மறு குடியேற்றம் மற்றும் மறு வாழ்விற்கான வரைவு அறிக்கை’ – தமிழில் வெளியிட செயற்பாட்டாளர்கள் கோரிக்கை

விசாரணைக்கு அக்டோபர் 8 ஆம் தேதி ஆஜராகமாறு ஆஷிஷ் மிஸ்ராவிற்கு அனுப்பப்பட்டிருந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் அன்றைய தினம் ஆஜராகவில்லை.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 7 ஆம் தேதி இரண்டு பேரை உத்திரபிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆஷிஷ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டை மறுக்கும் அவரது தந்தை அஜய் மிஸ்ரா, “சம்பவ இடத்தில் ஆஷிஷ் மிஸ்ரா இல்லை என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. ஒருவேளை ஆஷிஷ் மிஸ்ரா அங்கிருந்தால் அவரைக் கொன்றிருப்பார்கள்” என குறிப்பிட்டிருந்தார்.

‘காந்திக்கு பதிலாக சாவர்க்கரை தேசத்தந்தையாக பாஜக அறிவிக்கும்’ – ராஜ்நாத் சிங் பேச்சிற்கு ஒவைசி கண்டனம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க இருப்பதாக கூறியிருந்தனர்.

‘அதிக பெண் ஊழியர்களைக் கொண்ட பள்ளிகளில் அதிக சண்டைகள் ஏற்படுகின்றன’ – ராஜஸ்தான் கல்வி அமைச்சர்

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ராகுல்காந்தி தலைமையிலான குழு மனு அளித்தது. பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத், மல்லிஜார்ஜூன கார்கே, ஏ.கே.ஆண்டனி உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர். குடியரசு தலைவரோடு சந்திப்பு முடிந்த ராகுல்காந்தி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளதாகவும், மேலும், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்