லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகளை மோதிய வாகனத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஷீஷ் மிஸ்ரா அமர்ந்துள்ளது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் அக்டோபர் 3 ஆம் தேதி விவசாய சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கியுள்ளனர்.
‘இந்தியாவை தனியாருக்கு விற்கிறார் பிரதமர் மோடி’ – பாஜக சட்டமன்ற உறுப்பினர் விமர்சனம்
அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள்மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலுக்குக் காரணமான ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும், அவரது மகன் அஷீஷ் மிஸ்ரா மீது கொலை முயற்சி வழக்குத் பதிய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
”விவசாயிகளை மோதிய வாகனத்தில் என் மகன் இல்லை நிரூபித்தால் பதவிவிலகத் தயார்” என்று அஜய் மிஸ்ரா தெரிவித்திருந்தார். இந்நிலையில், காருக்குள் அமைச்சரின் மகன் அஷீஷ் மிஸ்ரா அமர்ந்திருக்கும் காணொளி வெளியாகியுள்ளது. எதிர்க் கட்சி தலைவர்கள் அக்காணொளியைப் பகிர்ந்துள்ளனர். மேலும், காரை ஓட்டிச் சென்றது அமைச்சரின் மகன்தான் என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
(விவயாயிகள் பேசிக்கொண்டதை வைத்தே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் மகன் இருந்ததாக சொல்லப்படும் காணொளியின் உண்மைத்தன்மையை என்.டி.டி.வி சரி பார்க்கவில்லை)
SOURCE :NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.