Aran Sei

லக்கிம்பூர் வன்முறையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சரின் மகன்– கைதுக்குப் பின் டெங்கு என மருத்துவமனையில் அனுமதி

க்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியென குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக எழுந்த சந்தேகத்திற்குப் பிறகு, அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று உத்தரபிரதேச சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மூத்த சிறை அதிகாரி ஒருவர், தற்போது மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு என சந்தேகிக்கப்படுவதால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்? – கமல்ஹாசன் கேள்வி

மேலும், டெங்கு நோய் பரிசோதனைக்காக ஆஷிஷ் மிஸ்ராவின் ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று(அக்டோபர் 23), உத்தரபிரதேச குற்றப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு, லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் மேலும் மூன்று நபர்களைக் கைது செய்ததையடுத்து, இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

’தமிழ்நாட்டு மீணவர்கள் மீது இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல்’ – கண்டித்து மே17 இயக்கம் போராட்டம்

அக்டோபர் 3 ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட மொத்தம் எட்டு பேர் உயிரிழந்தனர்.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்