Aran Sei

லக்கிம்பூர் வன்முறை: ‘உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கோருவது இழப்பீட்டை அல்ல நீதியை’- பிரியங்கா காந்தி

க்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கோரிவது இழப்பீட்டை அல்ல நீதியைதான் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நேற்று(அக்டோபர் 7), லக்கிம்பூர் கெரி வன்முறையில் கொல்லப்பட்ட நான்கு விவசாயிகளில் ஒருவரான குர்விந்தர் சிங்கின் குடும்பத்தினரை பரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள அவர், “ஒன்றிய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால், யாராவது ஒருவர் ஆட்சியில் இருந்தால், அவர் அமைச்சராக இருந்தால், அவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதைதான் பிரதமர் மோடியின் அரசு பொதுமக்களுக்கு ஒரு செய்தியை சொல்கிறது என்றே பார்க்கப்படும்” என்று கூறியுள்ளார்.

‘பிரதமரே உங்களுக்கு ஏன் விவசாயிகள்மீது இவ்வளவு வெறுப்பு?’- டெல்லி முதலமைச்சர் கேள்வி

“மேலும், ஒருவர் அமைச்சராகவோ அல்லது பாஜக தலைவராகவோ இருந்தால், அவரால் எதையும் செய்ய முடியும். சாதாரண மக்களுக்கும், ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் தலித்துகளுக்கும் பெண்களுக்கும் அவர்களிடத்தில் நீதி இல்லை. இதைதான் மோடிஜி மக்களுக்குச் சொல்லும் செய்தி. வன்முறையில் உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களையும் நாங்கள் சந்தித்தோம். எல்லோரும் ஒருமித்து சொல்வது ஒன்றைதான், ‘எங்களுக்கு இழப்பீடு பற்றி கவலை இல்லை. உள்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்’ என கூறுகிறார்கள். அதை பற்றி மட்டுமே அவர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் நீதியைதான் கோருகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வன்முறையில் கொல்லப்பட்ட எட்டு பேரில் ஐந்து பேரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த பிரியங்கா காந்கி, உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பத்தினரையும் சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

லக்கிம்பூர் கேரியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் – சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா

இதுகுறித்து, அவர் கூறுகையில், “உயிரிழந்த பாஜகவினரின் குடும்பங்களை சந்திக்க, அக்குடும்பத்தினரின் அனுமதியை காவல்துறையினர் வழியாக கேட்டேன். ஆனால், அவர்கள் என்னைச் சந்திக்க விரும்பவில்லை என்று கூறியதாக காவல்துறையினர் கூறினர். அவர்களுக்கு எனது அனுதாபத்தைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டேன்” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்