Aran Sei

லக்கிம்பூருக்கு சொந்த வாகனங்களில் செல்ல காவல்துறை அனுமதி மறுப்பு – லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணா

க்கிம்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை காணச் செல்வதற்கு சொந்த வாகனங்களை பயன்படுத்த கூடாது என்று உத்திரபிரதேச காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

ஞாயிற்கிழமை லக்கிம்பூர் கேரி பகுதியில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் உத்திரபிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா வருகைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது விவசாயிகள் கூட்டத்திற்கு இடையே அமைச்சர் மகனின் கார் மற்றும் உடன் வந்த வாகனங்கள் நுழைந்ததில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

லக்கிம்பூர் கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் – சம்பத்தை படம்பிடித்ததே காரணம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு

மேலும், போராட்டக் களத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர் ராமன் கஷ்யப் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

லக்கிம்பூர் கேரியில் சிறப்பு அனுமதி பெற்று லக்னோ விமான நிலையத்திற்கு ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பேகல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னி ஆகியோர் வந்த நிலையில், சொந்த வாகனங்களை பயன்படுத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கர்நாடகாவில் குடிநீரில் கனிமம் கலந்துள்ளதாக புகாரளித்த மக்கள் – மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுக்காததால் 6 பேர் உயிரிழப்பு

இதனைத் தொடர்ந்து லக்னோ விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி, “நாங்கள் சொந்த வாகனத்தில் பயணிக்க விரும்புகிறோம். அதற்குக் காவல்துறையினர் அனுமதியை மறுத்து வருகின்றனர். சொந்த வாகனத்தில் செல்லும் அனுமதி கோருகிறோம். அவர்களை எதையோ திட்டமிடுவது போல தெரிகிறது. அதனால், நான் இங்கு அமர்ந்துள்ளேன்.” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாளைப் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இருந்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவஜித் சிங் சித்து தலைமையில் உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரிக்கு பேரணியாக செல்ல இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கலவரத்திற்கு காரணமான அமைச்சரின் மகனை ஒரு வாரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாத் தெரிவித்துள்ளார்.

லக்கீம்பூர் வன்முறை: அஜய் குமார் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் – பிரதமருக்கு சிபிஎம் எம்.பி கடிதம்

கலவரத்தில் உயிரிழந்த மகோர்னியா கிராமத்தைச் சேர்ந்த குர்வீந்தர் சிங் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய ராகேஷ் திகாத், ”கலவரம் நடைபெற்ற இடத்தில் அமைச்சரின் மகனைப் பலரும் பார்த்துள்ளனர். இணைய வசதி மீண்டும் வழங்கப்பட்ட பிறகு பல காணொளிகள் வெளியாகும்.” என குறிப்பிட்டுள்ளார்.

“அமைச்சரின் மகனை ஒரு வாரத்திற்குள் கைது செய்வோம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. அது நடக்காவிட்டல், நாங்கள் ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகுறித்து விசாரிப்போம் என அவர் கூறியுள்ளார்.

Source : PTI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்