Aran Sei

லக்கிம்பூர் வன்முறை : ஒன்றிய இணைஅமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்யக் கோரி ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 

க்கிம்பூர் வன்முறையில் தொடர்புடைய ஒன்றிய உள்துறை இணைஅமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து, கைது செய்யக் கோரி சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவைச் சேர்ந்த விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆறு மணி நேரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் சண்டிகரில் தண்டவாளத்தில் அமர்ந்தனர்.

இந்த போராட்டத்தினால் இரு மாநிலங்களிலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் நீண்ட நேரம் ரயில்களுக்குக் காத்திருந்தனர்.

உலக பட்டினி குறியீடு: ஜெர்மன் அமைப்பிற்கும் ஒன்றிய அரசுக்கும் வலுக்கும் வாதம்

வன்முறையின்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தைச் செலுத்தியதாக விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படும் நிலையில், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அவர் வேறொரு நிகழ்வில் இருந்தார் என்று ஆதாரங்கள் காட்ட முடியும் என அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பின் லூதியானா, அமிர்தசரஸ், ஜலந்தர், மோகா, பாட்டியாலா, பெரோஸ்பூர் ஆகிய பகுதிகள் மற்றும் ஹரியானாவின் சார்கி தாத்ரி, சோனிபட், குருஷேத்ரா, ஜிண்ட், கர்னால் மற்றும் ஹிசார் பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.

கர்நாடகாவில் நவராத்திரி விழாவிற்கு காவி சால்வை அணிந்த காவல்துறையினர் – எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கண்டனம்

அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் மற்றும் பாஜகவிற்கு எதிரான கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் எழுப்பினர்.

லக்கிம்பூர் வன்முறையில் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களை ஒருங்கிணைத்து வரும் சம்யுக்ட் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்