Aran Sei

லக்கிம்பூர் வன்முறைக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்ட ஒன்றிய இணையமச்சரின் மகன் – 11 மணிநேர விசாரணைக்கு பின் கைது

க்கிம்பூர் வன்முறையில் கொலை குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை, 11 மணிநேர விசாரணைக்குப் பிறகு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.

விசாரணைக்கு ஒத்துழைக்காதது, உரிய முறையில் பதிலளிக்க தவறியது ஆகிய காரணங்களுக்காக ஆஷிஷ் மிஸ்ரைவை கைது செய்திருப்பதாக விசாரணைக்குப் பொறுப்பு வகிக்கும் காவல்துறைத் துணைத்தலைவர் உபேந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

அரசியலோ அரசியல் – ராஜாஜியும் இந்தி திணிப்பும்

ஆஷிஷ் மிஸ்ராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு, விசாரணைக்காக காவலில் எடுக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 3 ஆம் தேதி, உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள்மீது கார் ஏற்றியது தொடர்பாக விவசாயிகள் அளித்த புகாரின் பெயரில் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில், 4 விவசாயிகள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அக்டோபர் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகமாறு ஆஷிஷ் மிஸ்ராவிற்கு அனுப்பப்பட்டிருந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் அன்றைய தினம் ஆஜராகவில்லை.

‘பெகசிஸ் தொடர்பாக விசிக வழக்கு நடத்த முடிவு’ – திருமாவளவன் அறிவிப்பு

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 7 ஆம் தேதி இரண்டு பேரை உத்திரபிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆஷிஷ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டை மறுக்கும் அவரது தந்தை அஜய் மிஸ்ரா, “சம்பவ இடத்தில் ஆஷிஷ் மிஸ்ரா இல்லை என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. ஒருவேளை ஆஷிஷ் மிஸ்ரா அங்கிருந்தால் அவரைக் கொன்றிருப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

நவராத்திரி திருவிழாவின் கடைசி நாளில் மோடி, அமித் ஷா கொடும்பாவி எரிக்கப்படும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

இந்தச் சம்பவத்தின்போது கலவரம் விளைவிக்கும் சக்திகள், விவசாயிகள் போர்வையில் பாஜகவினரை தாக்கியுள்ளனர் என அமைச்சர் அஜய் மிஸ்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்