Aran Sei

லக்கிம்பூர் வன்முறை: 10 பேர் கைது; துப்பாக்கியைக் கைப்பற்றிய காவல்துறையினர்

ட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக லக்கிம்பூர் கெரி காவல்துறையும் குற்றப் பிரிவின் சிறப்பு குழுவும் மோடி என்ற சுமித் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளன.

அவருடன் சிசுபால், நந்தன் சிங் பிஷ்ட் மற்றும் சத்ய பிரகாஷ் திரிபாதி ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(அக்டோபர் 18) கைது செய்யப்பட்ட  நான்கு பேருடன், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

கைது செய்யப்பட்டபோது, சத்ய பிரகாஷ் திரிபாதியிடம் இருந்து உரிமம் பெற்ற துப்பாக்கியும் மூன்று தோட்டாக்களையும் குற்றப் பிரிவின் சிறப்பு குழு கைப்பற்றியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

லக்கிம்பூர் வன்முறை : ஒன்றிய இணைஅமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்யக் கோரி ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 

விவசாயிகள் மீது வாகனம் மோதிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், தார் மஹிந்திரா காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய சுமித் ஜெய்ஸ்வாலை காவல்துறையினர் தேடிக்கொண்டிருந்தனர். இதற்கிடையில், ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் அவரது நண்பர் அங்கித் தாஸ், லத்தீப் என்ற காலே மற்றும் தாஸின் கார் ஓட்டுனர் சேகர் பாரதி ஆகியோர் காவல் முடிந்ததும் லக்கிம்பூர் மாவட்ட சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறையில் உள்ள தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வன்முறை குறித்து விசாரணை செய்யும் சிறப்பு விசாரணை குழு,  இதுவரை பல்வேறு இடங்களில் இருந்து 135 காணொளிகளைக் கைப்பற்றியுள்ளன. மேலும், புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளும் பெறப்பட்டுள்ளன.

Source: New Indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்