Aran Sei

நவராத்திரி திருவிழாவின் கடைசி நாளில் மோடி, அமித் ஷா கொடும்பாவி எரிக்கப்படும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

ன்முறைக்கு எதிராகப் போராடும் விதமாக நவராத்திரி விழாவின் கடைசி நாளில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கொடும்பாவி எரிக்கப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

லக்கிம்பூர் வன்முறை ஒரு திட்டமிட்ட சதி எனக் குறிப்பிடும் விவசாயிகள், அதற்குக் காரணமாக இருந்த ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகனைக் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

‘ஆக்கிரமிப்பாளர்கள் மனிதர்களை வீழ்த்துகிறார்கள் ஆட்சியாளர்களோ விமானங்களையே வீழ்த்துகிறார்கள்’ – ஏர் இந்தியா விற்பனை குறித்து சு.வெங்கடேசன் விமர்சனம்

சதித் திட்டத்திற்கு காரணமாக இருந்தது மற்றும் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருப்பதால் அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் தலைவர் யோகேந்திர யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகள் மீது ஏவப்பட்ட வன்முறையை எதிர்க்கும் விதமாக நவராத்திரியின் கடைசி நாளான அக்டோபர் 15 ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கொடும்பாவிகளை சம்யுக்த் கிசான் மோர்ச்சா எரிக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஏர் இந்தியா – வரலாறும் செயல்பாடுகளும்

லக்கிம்பூர் வன்முறை முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்ட சதி, தாக்குதலில் ஈடுப்பட்டவர்கள் விவசாயிகளை அச்சுறுத்த முயன்றனர் என விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்துள்ளார்.

”விவசாயிகளுக்கு எதிராக அரசு வன்முறையைப் பயன்படுத்தியுள்ளது. ஆனால், நாங்கள் வன்முறையைத் தேர்ந்தெடுக்க மாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இதயமே இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே இதயமே’ – பிறைசூடனுக்கு அஞ்சலி

லக்கிம்பூர் கலவரத்தைக் கண்டித்து அக்டோபர் 18 ஆம் தேதி ’ரயில் ரோகோ’ (ரயில் மறியல்) போராட்டம் நடத்தப்படும் என சம்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்