லக்கிம்பூர் வன்முறையில் தொடர்பிருப்பதாக கூறி பாஜக உறுப்பினர் உள்ளிட்ட மேலும் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
சுமித் ஜெய்ஸ்வால், ஷிஷி பால், சஹ்ட பிரகாஷ் திரிபாதி என்கிற சத்யம், நந்தன் சிங் பிஷ்ட் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 3 ஆம் தேதி விவசாயிகள் புகாரின் பெயரில் முதற்கட்ட வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில், புகாரில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சுமித் ஜெய்ஸ்வால் அளித்த பெயரில் மற்றொரு வழக்கு பதியப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அயோத்திபுரியைச் சேர்ந்த சுமித் ஜெய்ஸ்வால் அளித்த புகாரில், “பான்பிர்பூரில் நடைபெற்ற மல்யுத்த போட்டிக்கு உத்திரபிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவை அழைக்க சென்ற போது வன்முறை நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள்மீது கார் ஏற்றப்பட்ட நிகழ்வின்போது எடுக்கப்பட்ட காணொளியில், விவசாயிகள்மீது முதல் வாகனம் மோதியபோது, அதிலிருந்து சுமித் ஜெய்ஸ்வால் கீழறங்குவது பதிவாகியுள்ளது.
மேலும், போராட்டக்காரர்கள் தான் காரின் மீது தாக்குதல் நடத்தினர், கார் இடத்தை விட்டு நகரவில்லை என ஜெய்ஸ்வால் அவரது புகாரில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள அங்கித் தாஸ், சேகர் பாரதி, லத்தீப் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.