Aran Sei

‘தொழிலாளர்களுக்கு எதிரான சட்டநகலை கொளுத்துவோம்’ – தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

த்திய அரசால் கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட 4 தொழிலாளர் சட்டங்களைக் கொளுத்துவோம் எனத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டாண்டுகளில் அலட்சியத்தால் கொல்லப்பட்ட 421 தொழிலாளர்கள் : குஜராத் அரசு ஒப்புதல்

கடந்த 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசு இயற்றிய 4 தொழிலாளர் சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டுமெனக்கோரி நேற்றிலிருந்து மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சட்டங்களைத் திரும்பப்பெறா விட்டால் 4 சட்டநகல்களையும் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் – நாடுதழுவிய போராட்டமாக மாற்ற திட்டம்.

இதுகுறித்து தெரிவித்துள்ள தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, ” மோடி அரசு தொழிலாளர்களின் கோரிக்கைக்குச் செவி கொடுக்காமல் அரக்கத்தனமாகச் செயல்படுகிறது. சட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் வருகின்ற ஏப்ரல் 1 அன்று நாடுதழுவிய அளவில் சட்ட நகலைக் கொளுத்துவோம் ” என்றும் குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியை உறுதி செய்யுங்கள்: துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்

இந்தப் போராட்டத்தில் நாடுதழுவிய அளவில் 10 தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன என்றும்  தி இந்து செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்