Aran Sei

‘சிறையில் என் ஆன்மாவையல்ல; என் கால்களைதான் உடைக்க முடிந்தது’ – தலித் தொழிற்சங்க செயற்பாட்டாளர்  ஷிவ் குமார்

ஜ்தூர் அதிகார் சங்கதன் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும் தலித் தொழிற்சங்க செயற்பாட்டாளருமான ஷிவ் குமார், மற்றொரு செயற்பாட்டாளரான  நவ்தீப் கவுருடன் சேர்ந்து,  தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத ஒரு தொழிற்சாலை முன், அவர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, இருவரும் மீதும் மிரட்டிப் பணம் பறித்தல், கொள்ளை மற்றும் கொலை முயற்சி போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஷிவ்குமாரை சிறையில் காவல்துறையில் மூர்கத்தனமாக சித்திரவதை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டி, அவரது தந்தை தாக்கல் செய்த மனுவை, பிப்ரவரி 19 ஆம் தேதி விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், ஷிவ் குமாரின் மருத்துவ அறிக்கையை அளிக்க உத்தரவிட்டது.

மீனா ஹாரிசின் ட்வீட் – சர்வதேச கவனம் பெறும் தலித் பெண் தொழிலாளர் நவ்தீப் கவுர்

அதைத்தொடர்ந்து, அவர் பிப்ரவரி 20 ஆம் தேதி மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டார். பின்னர், மருத்துவ குழு தயாரித்தளித்த மருத்துவ அறிக்கையில், பலமான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதால், கால்களில் ஏற்பட்ட எலும்பு முறிவுகள் உட்பட எட்டு காயங்கள் இருக்கிறது என்றும் அவை அண்மையில் இரண்டு வாரங்களில் ஏற்பட்ட காயங்கள் என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் (மார்ச் 4), ஷிவ் குமாரின் மருத்துவ அறிக்கையைப் பரிசீலித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டது.

தொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.

இந்நிலையில், நேற்று (மார்ச் 5) பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (பிஜிஐஎம்ஆர்), ஷிவ் குமார் சிகிச்சைக்கு வந்துள்ளார்.

அப்போது, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அவர், “தினமும் மூன்று தடவை காவல்துறை அதிகாரிகளால் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டேன். மேலும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன். இரவுகளில் என்னைக் கண்ணயரவிடாமல் சித்தரவதை செய்வார்கள். மேலும் வெற்று தாள்களில் வலுக்கட்டாயமாக என்னைக் கையெழுத்திட செய்தார்கள்.” என்று தன் இருண்ட கணங்களை பற்றி கூறியுள்ளார்.

தொழிலாளர், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் இளம் பெண் – காவல் நிலையத்தில் சித்திரவதை

பின்னர், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள ஷிவ் குமார், “நான் சிறைசாலையிலிருந்து நேராக சண்டிகர் மருத்துவமனைக்கு வந்துள்ளேன். சிறையில் என் ஆன்மாவை உடைக்க முயன்றவர்களால், என் காலை மட்டுமே உடைக்க முடிந்தது. ஆனால், நான் மேலும் பலமாகிவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், தான் சிறையில் கடுமையாக தாக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்டதாகவும், தன்னை காலிஸ்தானி ஆதரவாளர் என்று முத்திரைக் குத்த காவல்துறை முயன்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “என் போராட்டம் இத்தோடு முடிவடையாது. விரைவில் போராட்டக்களம் திரும்புவேன்.” என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

பிப்பிரவரி 12 ஆம் தேதி, ஷிவ் குமாருடன் குற்றம்சாட்டப்பட்ட நோதீப் கவுருக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்