நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பற்றி எழுதிய ‘ஆபாச’ ட்விட்டுகளை அனுமத்தித்தது குறித்து இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து 7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு ட்விட்டரைக் நிலைக்குழு கேட்டுக்கொண்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது
மேலும், லடாக்கை சீனாவின் ஒரு பகுதியென தவறாகக் காட்டியதற்காகச் சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர், நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது. மாத இறுதிக்குள் பிழையைச் சரிசெய்வதாகவும் ட்விட்டர் உறுதியளித்துள்ளது என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் மீனாட்சி லேக்கி தெரிவித்துள்ளார்.
“உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா பதிவிட்டதை, ட்விட்டர் தனது தளத்தில் அனுமதித்தது வெட்கக்கேடானது” என்று அவர் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போன்ற உயர் அரசியலமைப்பு அதிகாரிகளை அவதூறு செய்வதற்கு ட்விட்டர் தனது தளத்தை தவறாகப் பயன்படுத்த அனுமதித்துள்ளது என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் மீனாட்சி லேக்கி குற்றம் சாட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.