Aran Sei

நகைச்சுவை கலைஞர் குனால் கம்ரா ஆணவமும் அகந்தையும் கொண்டவர்: உச்ச நீதிமன்ற மனுவில் புகார்

ச்ச நீதிமன்றத்தை அவதூறு செய்யும் வகையில், ட்வீட் செய்த குனால் கம்ரா, ஆணவமும் அகந்தையும் கொண்ட மனிதர் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, நகைச்சுவை கலைஞர், குனால் கம்ரா, உச்ச நீதிமன்றத்தை விமர்சித்துப் பல்வேறு ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து  உச்ச நீதிமன்றத்தை அவதூறு செய்ததாக குனால் கம்ரா மீது ஸ்ரீரங் கட்நேஷ்வர்கர் எனும் சட்ட மாணவர் தாக்கல் செய்த மனுவின் பின்னணியில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கைச் சந்தித்து வரும் குனால் கம்ரா தாக்கல் செய்த மனுவில், ”உச்ச நீதிமன்றம், பொதுமக்களை நம்ப வேண்டும், ஒரு சில நகைச்சுவைகளை வைத்து ஒரு நபரைப் பற்றிய முன்முடிவுக்கு வரக் கூடாது. நகைச்சுவையை ஒரு குற்றமாக கருதுவது, சகிப்புத்தன்மை அதிகரித்து வரும் சூழலில், ஒரு விளையாட்டைப் போல் ஆகிவிட்டது”  என்று கூறியிருந்தார்.

’சிறைபடுத்தப்பட்ட கலைஞர்களுக்கும், அதிகாரத்தின் செல்லப்பிராணிகளுக்குமான நாடாக இந்தியா மாறும்’ – நகைச்சுவைக்கலைஞர் குணால் கம்ரா

மேலும், உச்ச நீதிமன்றம் பற்றிய தன்னுடைய ட்வீட்டர் பதிவுகளை அவர் நீக்கவோ அல்லது அதற்காக மன்னிப்போ கோரவில்லை.

இதற்குப் பதில் மனு தாக்கல் செய்துள்ள கட்நேஷ்வர்கர், ” குனால் கம்ரா தன்னுடைய ட்விட்டர் (உச்ச நீதிமன்றம் பற்றிய ) பதிவுகள் நகைச்சுவையாக இருப்பதாக கூறுகிறார். ஆனால், ஒரு சாதரண மனிதனுக்கு கூட அது அருவெறுப்பானவை என்று தெரியும்” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அர்னாப் ஜாமீன் வழக்கு – விமர்சனம் செய்த குணால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

ஒரு நகைச்சுவை என்பது கதைகளத்துடன் இருக்க வேண்டும் எனவும் கட்நேஷ்வர்கர், குனால் கம்ரா தன்னுடைய மனுவின் மூலம் தான் செய்தது நகைச்சுவை தான் என நிறுவ முயல்கிறார் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

”ஒரு விவாதம் தோல்வியடைந்து விட்டால், தோல்வியுற்றவர் அவதூறு செய்வதை தங்களுடைய ஆயுதமாக்கி கொள்வர்” எனும் சாக்ரடீசின் வார்த்தைகளை மேற்கொள் காட்டிய கட்நேஷ்வர்கர், “சமூக ஊடகங்களில் பெரும் மக்கள் கூட்டத்தைத் தங்கள் பின்தொடர்பாளர்களாக வைத்துக் கொண்டிருக்கும் கம்ரா போன்றவர்கள் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி, மக்களின் மனதில் நச்சு கருத்துக்களை வளர்க்க முடியும்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்னாப் ஜாமீன் வழக்கு – விமர்சனம் செய்த குணால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

”நகைச்சுவை என்பது பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கும் நோக்கில் செய்யப்படும் தொழில்முறை பொழுதுபோக்கு. நையாண்டி என்பது அரசியல் அல்லது பிற சிக்கல்களின் பின்னணியில் மக்களின் முட்டாள்தனத்தை அம்பலப்படுத்த பயன்படுத்துவதாகும். இதை ஒரு ஆதாயமாக எடுத்துக் கொண்டு, எந்த மனிதனும் தனது தவறைப் நியாயப்படுத்த முடியாது. குனால் கம்ரா  தனது அவதூறான ட்வீட்டர் பதிவுகளை நகைச்சுவை என நியாயப்படுத்த முயல்கிறார்” என்று குனால் தாக்கல் செய்த மனுவிற்கு ஸ்ரீரங் கட்நேஷ்வர்கர் பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்