ஹரித்துவார் கும்பமேளாவில் கொரோனாக் கண்டறியும் போலிப் பரிசோதனை நடைபெற்ற விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளை உத்தரகண்ட் மாநில அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 26 அன்று, கும்பமேளா அலுவலர்[மருத்துவம் மற்றும் உடல்நலன்] மருத்துவர் அர்ஜுன் சிங் மற்றும் பொறுப்பு அலுவலர் [மருத்துவம் மற்றும் உடல்நலன்] என்.கே. தியாகி இருவரையும் பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்த முதலமைச்சர், இந்த விவகாரம் தொடர்பாக ஹரித்துவார் மாவட்ட நீதிபதி அமைத்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகளும் கும்பமேளாவின்போது துரித ஆண்டிஜென் பரிசோதனை மேற்கொண்ட நிறுவனத்தோடு தொடர்பில் இருந்துள்ளனர். இதன் காரணமாக அரசுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.
ஹரித்வாரின் தலைமை மேம்பாட்டு அதிகாரி தலைமையிலான விசாரணைக் குழு ஆகஸ்ட் 16 அன்று தனது அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
source: தி வயர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.