Aran Sei

கும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்

த்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடந்த கும்பமேளாவின் போது, ஏறத்தாழ ஒருலட்சம் பேருக்கு போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது  என்ற குற்றச்சாட்டு குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் விசாரணை நடத்திவருவதாக தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்

இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப் பட்டபோது பதிலளித்த இணைசெயலர் லாவ் அகர்வால், “பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்தவருக்கு ஹரித்துவாரில் கொரோனா பரிசோதனை செய்தது போன்று குறுஞ்செய்தி வந்தது குறித்து நாங்கள் அறிந்தோம். இந்த தகவல் பஞ்சாப் அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, பின்னர் உத்தரகண்ட் மாநில அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு, இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

டெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் – பிணையில் விடுவித்த டெல்லி உயர்நீதிமன்றம்

மேலும், போலியாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கைகுறித்து, அந்த அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும், அந்த அறிக்கை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, முறையான கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல், போலியாக நடத்தப்பட்டது போன்ற ஆவணங்களை உருவாக்கியதில் சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

‘மிசோ மொழியை எட்டாவது அட்டவணையில் இணைத்து அலுவல் மொழியாக்குங்கள்’ – மிசோரம் தேவாலய தலைவர்கள் கோரிக்கை

மேலும், பெரும்பாலான கொரோனா பரிசோதனை முடிவுகள் தனியார் பரிசோதனை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவை உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி ஒரு நாளைக்கு ஏறத்தாழ 50,000 பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹரித்வார் நிர்வாகம் நடத்திய முதற்கட்ட ஆய்வில் மாவட்ட சுகாதார துறையின் கீழ் பல தனியார் பரிசோதனை மையங்களில், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது குறித்து போலியான ஆவணங்களை வெளியிட்டதும், தொலைபேசி எண்ணும்,அடையாள அட்டைகளும் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்