Aran Sei

‘சட்டபேரவையில் ஆபாச படம் பார்க்க கற்பதை தவிர, ஆர்எஸ்எஸ்ஸில் கற்க எதுவுமில்லை’- எச்.டி.குமாரசாமி

ட்டபேரவையில் உட்கார்ந்து ஆபாச படம் பார்க்கக் கற்றுக்கொள்வதை தவிர, ஆர்எஸ்எஸ் ஷாகாவில் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்று கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்.டி.குமாரசாமி கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக, ஆர்.எஸ்.எஸ் மீது கடுமையான விமர்சனங்களை எச்.டி. குமாரசாமி வைத்து வருகிறார். இதனையடுத்து, பாஜக மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல் ஆர்எஸ்எஸ் ஷாக்காவுக்கு வந்து ஆர்எஸ்எஸ்ஸின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளுமாறு எச்.டி. குமாரசாமி அழைப்பு விடுத்திருந்தார்.

மீனவர்களைத் தாக்கும் இலங்கை கடற்படை மீது நடவடிக்கை வேண்டும் – ஒன்றிய அரசிடம் வேண்டுகோள் விடுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி

இந்நிலையில், இதுகுறித்து, நேற்று(அக்டோபர் 19), இடைத்தேர்தல் பரப்புரையின்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள எச்.டி.குமாரசாமி, “அவர்களின்(ஆர்எஸ்எஸ்) நட்பு எனக்கு வேண்டாம். ஆர்எஸ்எஸ் ஷாகாவில் என்ன கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பதை நாம் பார்க்கவில்லையா? விதான சவுதாவில்(கர்நாடக சட்டபேரவை கட்டிடம்) எப்படி நடந்துகொள்வது… சட்டபேரவை கூட்டத்தொடர் நடந்துக்கொண்டிருக்கும்போது ஆபாசப் படங்களைப் பார்ப்பது. ஆர்எஸ்எஸ் ஷாகாவில் அவர்களுக்கு (பாஜகவினருக்கு) இது கற்பிக்கப்பட்டதா? இதைக் கற்றுக்கொள்ளதான் நான் அங்குச் செல்ல வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எனக்கு அவர்களின் ஷாகா வேண்டாம் என்றும் அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்றும் கூறி, பாஜகவின் அழைப்பை அவர் மறுத்துள்ளார்.

‘தனி கட்சி: பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்’- பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்

எச்.டி.குமாரசாமி 2012-ல் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு பேசியுள்ளார். கர்நாடக மாநில சட்டபேரவையில் பாஜகவைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் தங்கள் செல்போனில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் காணொளி வெளியாகி, சர்ச்சையானது. அதைத்தொடர்ந்து, அம்மூவரும் ராஜினாமா செய்தனர்.

Source: PTI

தொடர்புடைய பதிவுகள்:

ராமர் கோவில் நன்கொடை : ‘ஹிட்லரின் நாஜிக்கள் செய்ததை ஆர்.எஸ்.எஸும் செய்தால் நாடு என்னாகும்?’ – எச்.டி.குமாரசாமி

‘ராமரின் பெயரில் ஊழல்’ – தெருத் தெருவாக கொள்ளையடிப்பதாக எச்.டி.குமாரசாமி குற்றச்சாட்டு

‘பாஜக கொள்கையின் ஆணி வேரை அசைப்போம்’ – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்