Aran Sei

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்கு விற்பனை செய்வது எதேச்சதிகார நடவடிக்கை – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்

ந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்கு விற்பனை செய்வது சர்வாதிகார, எதேச்சதிகார நடவடிக்கை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”இந்தியன் ஓவர்சீஸ் வங்கியையும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவையும் தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுதவிர மாநில கட்டுப்பாட்டில் இயங்கும் சில வங்கிகளையும் தனியார் மயமாக்குவது தொடர்பாக சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு அலோசித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

’அநீதிக்கெதிரான போராட்டம் தொடரும்’ – சிஏஏ போராட்டத்தில் கைதாகி பிணையில் வந்த மாணவர் பிரதிநிதிகள் பிரகடனம்

”லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் வங்கியைத் தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்த கேள்விக்கு மோடி அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  தமிழ்நாட்டின் பாரம்பரியமான வங்கியாகும். 1.02.1939ல் எம்சிடிஎம் செட்டியாரால் தொடங்கப்பட்டு, 1969 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்தியா காந்தியால் நாட்டுமையாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னோடியாக திகழும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தமிழ்நாட்டில் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை என 1,500 கிளைகள் உள்ளன.

ரேஷன் அட்டை இல்லாததால் இருமாதம் பட்டினியால் வாடிய குடும்பம் – துயர் துடைத்த தன்னார்வலர்கள்

”இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எந்த சேவைக்கு தனியாக சேவைக் கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர், இந்தியாவின் எந்த வங்கிக் கிளையிலும் சேவைக் கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம். சேவைக் கட்டணமின்றி கிராமப்புற மக்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆற்றி வரும் சேவை மகத்தானது.” என குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஒரு வங்கியையும் உருவாக்காத மோடி அரசு, மக்களுக்குச் சேவை செய்து கொண்டும், அதே சமயம் லாபத்திலும் இயங்கும் வங்கிகளை விற்க முயல்வது மக்கள் விரோதப் போக்காகும் என அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

”தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் 85 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்கு விற்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். அரசின் இந்த முடிவால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 26 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் 33 ஆயிரம் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வங்கியில் குவிந்த இந்தியர்களின் பணம் –  20 ஆயிரம் கோடிக்கு மேல் இருப்பதாக சுவிஸ் சென்ட்ரல் பேங்க் தகவல்

”இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாரிடம் விற்றால், தமிழகத்தில் விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க உறுதுணையாக இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்கு விற்பனை செய்யும் மோடி அரசின் சர்வாதிகார, எதேச்சதிகார, மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக மக்களும், அனைத்துக் கட்சியினரும், அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராட முன்வர வேண்டும்”. என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்