Aran Sei

அகிலேஷ் யாதவின் கனவில் தினமும் தோன்றும் கிருஷ்ணர் – உ.பி.யில் ராமராஜ்ஜியம் அமைக்கப்போவதாக உறுதி

2022 ஜனவரி 3 அன்று உத்தரபிரதேசத்தில் நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அங்கு நான் ஆட்சியை அமைத்து “ராம ராஜ்ஜியத்தை” உருவாக்குவேன் என்று ஒவ்வொரு இரவிலும் கிருஷ்ணர் எனது கனவில் வந்து கூறுகிறார் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

பாஜகவின் பஹ்ரைச் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மாதுரி வர்மாவை தனது கட்சியில் சேர்ப்பதற்காக நடந்த நிகழ்ச்சியின் போது உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ் இவ்வாறு கூறியுள்ளார்.

“ராம ராஜ்ஜியம் என்பது சமாஜ்வாதியை (சோசலிசம்) நோக்கி செல்லும் பாதை பாதையாகும். ‘சமாஜ்வாதி’ கட்சி ஆட்சி அமைத்த நாளில், உத்திரபிரதேசத்தில் “ராம ராஜ்யம்” அமைக்கப்படும்,” என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

Source : TheHindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்