Aran Sei

மதுராவின் ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணர் இருக்கிறார் அவருக்கு உருவம் தேவையில்லை – கங்கனா ரணாவத்

credits : the indian express

யோத்தியில் எங்கும் எதிலும் ராமர் நிறைந்திருக்கிறார். அதுபோலவே மதுராவில் கிருஷ்ணரும், காசியில் சிவனும் நிறைந்துள்ளனர் என்று திரைக்கலைஞர் கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

“மதுராவின் ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணரும், அயோத்தியின் ஒவ்வொரு துகளிலும் ராமரும் உள்ளனர். அதேபோல காசியின் ஒவ்வொரு துகளிலும் சிவபெருமான் இருக்கிறார். அவருக்கு ஒரு உருவம் தேவையில்லை, அவர் ஒவ்வொரு துகளிலும் வசிக்கிறார். ‘ஹர் ஹர் மகாதேவ்’ என்று கோஷமிட்டுள்ளார்.

குதுப்மினார் கோபுரத்தை இஸ்லாமிய மன்னர் கட்டவில்லை: விக்ரமாதித்யா மன்னர்தான் கட்டினார் என தொல்லியல் துறையின் முன்னாள் அதிகாரி கருத்து

வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதி வளாகத்திற்குள் மே 14, 15, 16 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெற்றது. அதன் அறிக்கையை மே 17 தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நிதிமன்றத்தில் கமிஷனர் மற்றும் வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

கியானவாபி மசூதி வளாகத்திற்குள் வீடியோ ஆய்வு நடத்துவதற்காக மாவட்ட நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிஷன் இன்று தனது அறிக்கையைச் சமர்ப்பித்ததாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்

சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் வளாகத்தில் உள்ள இடத்தைப் பாதுகாக்குமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது.

அண்மையில் காசி விசுவநாதர் கோயிலுக்குச் சென்ற திரைக்கலைஞர் கங்கனா ரணாவத்திண்டம் கியானவாபி மசூதி காசி கோயிலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கு மற்றும் அதன் நீட்சியாக நடைபெறும் சர்ச்சைகள்குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

கியானவாபி மசூதி விவகாரம் – ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது ஆய்வுக்குழு

அதற்குப் பதிலளித்த கங்கனா ரணாவத், அயோத்தியில் எங்கும் எதிலும் ராமர் நிறைந்திருக்கிறார். அதுபோலவே மதுராவில் கிருஷ்ணரும், காசியில் சிவனும் எங்கும், எதிலும் நிறைந்துள்ளனர் என்று கூறி ஹர்ஹர் மஹாதேவ் என்றும் முழங்கினார்.

கங்கனா ரணாவத் எப்போதும் சர்ர்சைக்குரிய கருத்துக்களுக்குப் பேர் போனவர். பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் பதிந்ததால் ட்விட்டர் நிர்வாகம் அவரை ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியது.

Source: The Indian Express

அடுத்த குறி நீட்டுக்குதான் | Saravanan Annadurai

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்