Aran Sei

ஆக்ரா கோட்டையின் கீழ் கிருஷ்ணர் சிலை புதைக்கப்பட்டுள்ளது – கிருஷ்ணஜென்மபூமி நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் புதிய மனு

க்ராவில் அவுரங்கசீப் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட செங்கோட்டையின் திவான்-இ-காஸ் பகுதியில் உள்ள படிக்கட்டின் கீழ் கிருஷ்ணரின் சிலைகள் புதைக்கப்பட்டுள்ளதாக மதுரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள கிருஷ்ணஜென்ம பூமி வழக்கில்  மதுராவிலிருத்த  சிலைகள், ஆக்ரா கோட்டையின் மசூதியின் படிகளில் புதைக்கப்பட்டிருப்பது குறித்து இந்திய தொல்லியல் துறை ஆராய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கிருஷ்ண ஜன்மபூமி’ : மற்றுமொரு இருண்ட காலம் நோக்கி

இந்த மனுவைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் மகேந்திர பிரதாப்சிங், “அவுரங்கசீப் ஆட்சிக்காலத்தில் மதுராவில் உள்ள கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை இடித்து அங்கிருந்த சிலைகளை ஆக்ரா கோட்டையில் புதைத்தாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்” என்று தெரிவித்துள்ளதாகவும் பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி கூறுகிறது.

மதுராவில் மசூதியை அகற்றகோரி மற்றொரு வழக்கு – விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்

மேலும், பின் நாளில் அந்த இடத்தில் இஸ்லாமியர்கள் புதைக்கப்பட்டதாகவும், இது திட்டமிட்டே இந்து மத உணர்வுகளைப் புண்படுத்த அவுரங்கசீப் போன்ற இஸ்லாமியர்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதாப்சிங் குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, வழக்கறிஞர் மகேந்திர பிரதாப்சிங் மதுரா பகுதியில் உள்ள மசூதியை கிருஷ்ணர் பிறந்த இடம் எனக்கூறி மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

ராமர் கோயில் கட்டுமானம் – போலியாக நன்கொடை பெற்றதாக ஐந்து பேர் மீது வழக்கு

மேலும்,  கிருஷ்ணா ஜென்மபூமி குறித்து 7 வழக்குகள் மதுரா நீதிமன்றத்திலும், 6 வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ள நிலையில், இந்தப் புதிய மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மதவழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991’ ன் படி ஆகஸ்ட் 15, 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த முன் இருந்த வழிப்பாட்டு தலங்கள் அனைத்தும் அதேநிலையில் நீடிக்கும் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்