Aran Sei

மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், தினகரன் அதிமுகவில் சேர்வது பற்றி பரிசீலிக்கப்படும் – கே.பி.முனுசாமி தகவல்

திமுக மற்றும் அமமுக இணைப்புக்கு வாய்ப்பு இல்லை என்றும் அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்க்க பரிசீலிக்கப்படும் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜனவரி 31) மாலை, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, “அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான். இதுதொடர்பாக அதிமுக பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டு, அதற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகள் உருவாக்கப்பட்டது. இது செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.” என்று அவர் நினைவூட்டியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் விமர்சிக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து போயிருக்கும் குருமூர்த்தி : டிடிவி தினகரன் கிண்டல்

சிலர் சுய நலத்துக்காக கூறும் கருத்துகளை ஏற்கமுடியாது என்று கூறும் கே.பி.முனுசாமி, “அதிமுகவை கைப்பற்ற டிடிவி தினகரன் பல்வேறு கோணங்களில் முயற்சி செய்தார். ஆனால், உண்மையானவர்கள் பக்கம் தான் தர்மமும், நியாயமும் இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயலலிதாவால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவர் கட்சியை கைப்பற்றுவதாகக் கூறுவது கேலிக்கு உரியது. சசிகலாவை ஏன் அதிமுகவை விட்டு நீக்கவில்லை என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் உறுப்பினர் புதுப்பிப்பு பணி நடந்தது. அப்போதும் கூட சசிகலா தன்னை புதுப்பித்து கட்சி உறுப்பினராக இணைத்துக் கொள்ளவில்லை. ஆக, கட்சியிலேயே இல்லாத சசிகலாவை எப்படி நீக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

‘தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா’ – அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேட்டி – மீண்டும் உடைகிறதா அதிமுக?

டிடிவி தினகரன் என்ற தனிப்பட்ட நபர் அரசியல் செய்வதற்காக தொடங்கப்பட்ட கட்சி அமமுக என்றும் அந்த கட்சியுடன் அதிமுக இணைய வாய்ப்பு இல்லை என்றும் கே.பி.முனுசாமி  உறுதிப்படுத்தியுள்ளார்.

“அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு டிடிவி தினகரன் மன்னிப்புக் கடிதம் கொடுத்து தன்னை கட்சியில் இணைக்கக் கோரினால், அவரை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக அதிமுக தலைமை பரிசீலனை செய்யும். பரிசீலனை முடிவை ஏற்பதாக இருந்தால் அவரை ஏற்றுக் கொள்ளலாம். தகுதியற்ற நபர் என முடிவு செய்யப்பட்டால் அவரது மன்னிப்புக் கடிதம் குப்பைத் தொட்டிக்குத் தான் செல்லும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்