Aran Sei

கோழிக்கோடு இரட்டை குண்டுவெடிப்பு வழக்கு – ஆதாரம் இல்லையென நசீர், ஷஃபாஸை விடுதலை செய்த கேரள உயர் நீதிமன்றம்

2006ஆம் ஆண்டு கோழிக்கோடு இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில், 2011 இல் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தடியான்டெவிடா நசீர் மற்றும் ஷஃபாஸ் ஆகியோரை கேரள உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

நேற்று(ஜனவரி 27), நீதிபதிகள் கே வினோத் சந்திரன் மற்றும் ஜியாத் ரஹ்மான் அடங்கிய அமர்வு, என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை எதிர்த்து, தடியான்டெவிடா நசீர் மற்றும் ஷஃபாஸ் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, கேரள உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றச்செயலுக்கான திட்டத்தை தயாரித்தார் அல்லது செய்தார் என்பதற்கான நம்பகமான ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை ஒடுக்குவதில் பாஜக, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்துள்ளன – ஆலன் ஷுஐப் 

மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்துல் ஹலீம் மற்றும் அபுபக்கர் யூசுப் ஆகிய இருவரையும் விடுதலை செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து என்ஐஏ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் நிராகரித்துள்ளது.

2006ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளை திட்டமிட்டு செயல்படுத்தியதாக தடியான்டெவிடா நசீர் உள்ளிட்டோர்மீது குற்றம் சாட்டப்பட்டது. தடியான்டெவிடா நசீர் 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குகள் கஸ்பா மற்றும் நடக்காவு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன. பின்னர், அவ்வழக்குகள் சிபிசிஐடி-க்கும் பின்னர் தேசிய புலனாய்வு முகமைக்கும் மாற்றப்பட்டன.

என்ஐஏ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967 இன் (உபா சட்டம்) கீழ் பல்வேறு பிரிவுகளின் நசீர் மற்றும் ஷஃபாஸ் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது நினைவுகூரத்தக்கது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்