கோவை மாவட்டம் குனியமுத்தூர் ஆற்றுப்பாலம் பகுதியில்,உள்ள பேக்கரியின் காசாளரை கடந்த மார்ச் 29 அன்று அப்பகுதியின் காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்கியுள்ளார்.
நேற்றைய தினம் கோவை காந்திபுரம் பகுதியில் , உணவகமொன்றில் இரவு உணவருந்திய பொதுமக்கள் அப்பகுதி உதவி ஆய்வாளர் முத்துவினால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
உணவருத்தியவர்களை தாக்கிய உதவி ஆய்வாளர் – கைது செய்ய வலியுறுத்தி உணவக உரிமையாளர் ஆட்சியரிடம் புகார்
இதன் சிசிடிவி காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அதே போன்று குனியமுத்தூர் பகுதியில் உள்ள பேக்கரியில் காசாளரை குனியமுத்தூர் காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்கி இழுத்து செல்லும் சிசிடிவி காணொளி இணையத்தில் பரவிவருகிறது.
கடந்த மார்ச் 29 அன்று பேக்கரி 10.30 மணிவாக்கில் செயல்பட்டு வந்த நிலையில் கடையை மூடவில்லை என்று குனியமுத்தூர் காவல்துறை உதவி ஆய்வாளர் காசாளரை தாக்கியுள்ளார்.
காந்திபுரம் பகுதியில் உணவகத்தில் உதவி ஆய்வாளர் முத்து தாக்குதல் நிகழ்த்தியது குறித்து மனித உரிமை ஆணையம் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.