Aran Sei

கங்காசாகர் மேளா – ‘மத நம்பிக்கைகளை விட உயிர் தான் முக்கியம்’ : கொல்கத்தா உயர் நீதிமன்றம்

வட இந்தியாவில் கொண்டாடப்படும் கங்காசாகர் மேளா விழாவில் மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் மத நம்பிக்கைகளை விட உயிர் தான் முக்கியம் என்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை போன்று வட மாநிலங்களில் மகர சங்கராந்தி விழா பிரபலமான பண்டிகையாகும். அந்தப் பண்டிகையின் போது, மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் கங்கா சாகர் தீவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடுவது வழக்கம். இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை பல்வேறு மாநிலங்கள் வழியாகச் சென்று வங்கக் கடலில் சங்கமிக்கிறது. கங்கை நதி சங்கமிக்கும் முகத்துவாரம் கங்கா சாகர் என்றழைக்கப்படுகிறது.

இந்த விழாவில் அதிகாலை மூன்று மணிக்கே சிறப்பு பூஜைகள் தொடங்கப்பட்டுவிடும். பக்தர்கள் விடிய விடிய வருகை தந்து கங்கையில் புனித நீராடி கொண்டாடுவர். கடந்த ஆண்டு இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று அதிவேகமாக பரவி வரும் சூழலில் கங்காசாகர் மேளாவில் மக்கள் கூடுவது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்க அரசை சீர்குலைக்க முயலும் பாஜக : தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்த மனு நீதிபதிகள் தொட்டத்தில் பி ராதாகிருஷ்ணன் மற்றும் அர்ஜித் பானர்ஜி அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கங்காசாகர் மேளாவுக்கு வருகை புரியும் பக்தர்கள் கங்கை ஆற்றில் நீராடுவது தண்ணீர் வழியாக நோய்த்தொற்றை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என கவலை தெரிவித்துள்ளனர்.

ஒரு பெண் தனது விருப்பத்தோடு எடுத்த முடிவில் யாரும் தலையிட முடியாது – கல்கத்தா உயர் நீதிமன்றம்

”கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் பொதுமக்களின் ஆரோக்யத்தை கருத்தில் கொண்டு அரசு கங்காசாகர் மேளாவை நடத்துவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ள நீதிபதிகள் “மத நம்பிக்கைகளை விட உயிர் தான் முக்கியம்” என்று மேற்கு வங்க அரசுக்கு வலியுறுத்தியதாக பார் அண்ட் பென்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா சூழலில் பண்டிகைகளை விட உயிர்களைக் காப்பது அவசியம்: உச்ச நீதிமன்றம்

மேலும், இந்த விழாவில் பக்தர்கள் நேரடியாக கலந்துக் கொண்டு கங்கையில் நீராடுவதை தவிர்க்க, கங்கையில் இணைய வழி நீராடலில் (கங்கை தண்ணீர் ஒரு பாட்டிலில் பிடிக்கப்பட்டு பக்தர்களின் வீட்டுக்கு கொண்டு சேர்க்கப்படும்) ஈடுபடலாம் என நீதிபதி யோசனை தெரிவித்துள்ளனர்.

பள்ளிக் கட்டணம் – கொரோனா முடக்கத்திலும் தனியார் பள்ளிகள் பிடிவாதம்

மேலும், இந்த ஆண்டு கங்காசாகர் மேளாவை நடத்துவது தொடர்பாக பாதுகாப்பு விதிமுறைகளை ஜனவரி 13-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கும் ஜனவரி 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்