Aran Sei

இஸ்லாமியர் வாக்குகளை பிரிக்க பாஜகவிடம் இருந்து பணம் வாங்கும் ஓவைசி : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அகில இந்திய மஜ்லிஸ் இ இதிஹதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியின் மேற்கு வங்க பயணம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க இஸ்லாமியர்களின் மத முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான ஃபுர்ஃபுரா ஷாரிஃப் எனும் பகுதியில் அப்பாஸ் சித்திக்கி என்பவரை ஓவைசி சந்தித்துள்ளார்.

மக்களுக்காகத் தொடர்ச்சியாகப் போராடுவேன் – ’திரிணாமுல்’ 23 வது ஆண்டு விழாவில் மம்தா பானர்ஜி

அப்பாஸ் சித்திக்கை ஏஐஎம்ஐஎம்மின் பிரச்சார முகமாக இருக்க கோரிக்கை விடுத்துள்ள அவர், அதன் மூலம் ஹூக்லி, மல்தா, முர்ஷிதாபாத், தினஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் வாக்குகளைப் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளார் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

ஃபுர்ஃபுரா ஷாரிஃப்பின் முக்கிய பிரச்சாரகரும் திரிணாமுல் காங்கிரசின் ஆதரவாளருமான தோஹா சித்திக்கின் உறவினர்தான் அப்பாஸ் சித்திக்கி. அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இஸ்லாமிய மக்களை வெறும் வாக்குகளாகப் பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜகவை எதிர்த்து ரத்தம் சிந்தி போராடுவோம் – மம்தா பானர்ஜி

மேற்கு வங்க இஸ்லாமியரகள் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக தான் வாக்களிப்பார்கள் என கூறியுள்ள தோஹா சித்திக்கி. அப்பாஸ் சித்திக்கி பாஜகவுடன் நல்ல உறவில் இருகப்பதாக கூறியுள்ளார் ஓவைசி பாஜகவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார் என எண்டிடிவி பதிவிட்டுள்ளது.

மேற்குவங்க அரசை சீர்குலைக்க முயலும் பாஜக : தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

முன்னதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ”சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்க, அவர்கள் (பாஜக) ஹைதராபாத்தில் இருந்து ஒரு கட்சியைக் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் (ஏஐஎம்ஐஎம்) பாஜகவிடம் இருந்து பணம் பெறுகிறார்கள். இஸ்லாமியர்களின் வாக்குகளைப் ஏஐஎம்ஐஎம் பெற முயலும் இதன் மூலம் இந்துக்கள்ளின் வாக்குகள் முழுமையாக பாஜகவுக்குச் செல்லும். இதுவே அவர்கள் திட்டம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக கொல்கத்தா செல்லும் உள்துறை அமைச்சர் – இம்முறை விவசாயி வீட்டில் லன்ச்

இதையடுத்து ஓவைசி என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் ஊடகங்கள் இஸ்லாமியர்களின் வாக்குகள் பற்றியே பேசுவது ஏன்? மற்ற சமூகங்களுக்கு வாக்குகள் இல்லையா எனக் கேள்வொயெழுப்பியுள்ளார்.

இரண்டாவது முறையாக கொல்கத்தா செல்லும் உள்துறை அமைச்சர் – இம்முறை விவசாயி வீட்டில் லன்ச்

முதல்வர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர் “இந்த கேள்வியைப் பொருத்தவரை, ஏஎம்ஐஎம் எங்கு போட்டியிட்டாலும் அதன் மூலம் ஏஎம்ஐஎம் மட்டுமே பயனடைந்துள்ளது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். எனது முயற்சி எனது கட்சியையும் எனது வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்வதே ஆகும்” என்று கூறியுள்ளார்.

பழங்குடியினர் வீட்டில் `லஞ்சு’ – ‘அமித் ஷா அரங்கேற்றிய நாடகம்’ – மம்தா பானர்ஜி

மேலும் பேசிய அவர் “மம்தா பானர்ஜி இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளைச் முன் வைப்பது அவருடைய பதவிக்கு உகந்ததல்ல. ஆனால் அவர் மேற்கு வங்கத்தில் தன்னுடைய இருப்பை இழந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது” என்று அகில இந்திய மஜ்லிஸ் இ இதிஹதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் 30 சதவீதம் இஸ்லாமிய வாக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்