Aran Sei

மேற்கு வங்க முதல்வருக்கு ’சிகப்பு அட்டை’ காட்ட முயற்சி – பேரணியாக சென்ற இடதுசாரி கட்சியினர் மீது காவல்துறை தடியடி

கொல்கத்தாவில், நபன்னா அபியனின் (போராட்டம்) ஒரு பகுதியாக முதல் அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ’சிகப்பு கார்ட்’ காட்ட முயன்ற இடது சாரி அமைப்பின் தொழிலாளர்கள்மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 11 ஆம் தேதி, தலைமை செயலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றவர்கள்மீது  காவல்துறை தடியடி, கண்ணீர்புகை குண்டுகள் மற்றும் நீர் பிரங்கி பயன்படுத்தியதில் பெண்களுட்பட பலர் படுகாயமடைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 11 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று (பிப்ரவரி 12) திறக்கப்பட இருக்கும் நிலையில், காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து இடது சாரி அமைப்புகள், மாநிலம் தழுவிய 12 மணி நேர முழு அடைப்பிற்குஅழைப்பு விடுத்துள்ளதாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.

“பத்திரிகையாளர்களை தூக்கிலிட வேண்டும்” – நீக்கப்பட்ட வீடியோ : கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர்கள்

பள்ளி நேரங்களில் போக்குவரத்திற்கு சாலைகள் மற்றும் ரயில்வே தண்டவாளங்களில் முற்றுகை போராட்டத்தை, ஆதரவாளர்கள் மேற்கொண்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மாநில நிர்வாக வட்டாரம் தகவல் தெரிவிப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ’சிகப்பு அட்டை’ காட்டும் நோக்கில் இடது சாரி கட்சிகளின் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர், தலைமை செயலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றதாகவும், அப்போது முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, அவரது அலுவலகத்தில் இல்லை என்றும் தி வயர் தெரிவித்துள்ளது.

மீண்டும் மீண்டும் பரிணாமம் அடையும் கொரோனா நோய்க்கிருமி – தொடர் தடுப்பூசிகள் தேவை

இந்த மாத இறுதியில், பிரிகேட் பரேட் மைதானத்தில், இடது சாரி கட்சி தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் பேரணிக்கு  முன்னோட்டமாக, நேற்றைய போராட்டம் திட்டமிடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 11 ஆம் தேதி காலை, கொல்கத்தா மற்றும் அதன் அருகாமை நகரமான ஹவுராவின் பல பகுதிகளில் கூடியிருந்த இடது சாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பினர், அங்கிருந்து பேரணியாகத் தலைமை செயலகம் அமைந்திருக்கும் நபன்னா பகுதிக்குச் சென்றனர். சிலர் டிராக்டர்களில் பயணித்ததை காண முடிந்தது, சிலர் கால்பந்து, விசில், சிகப்பு அட்டைகளை ஏந்தி, கெலா ஹோபி  (அங்கு ஒரு போட்டி இருக்கும்) என முழங்கங்களை எழுப்பியபடி சென்றதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் பரவும் போராடும் விவசாயிகளின் மகாபஞ்சாயத்துகள்

”மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முதல் அமைச்சருக்குச் சிகப்பு அட்டை காட்டவே சென்றனர். முதல் அமைச்சருக்கு ’ராம் அட்டை’ காட்டுங்கள் என்ற பிரதமரின் கருத்துக்கு மாற்றாகவே இது இருந்தது. ராம் அட்டை என்றால் என்ன? கால்பந்தில் மஞ்சள் மற்றும் சிகப்பு அட்டைகள் மட்டுமே உள்ளது” என சிபிஐ(எம்) பிலிட்பீரோ உறுப்பினர் முகமது சலீம் கூறியதாக என்டிடிவி குறிப்பிட்டுள்ளது.

”மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏன் மம்தா பானர்ஜி அழுத்த நினைக்கிறார்? இந்த வன்முறை திட்டமிடப்பட்டது. தண்ணீருடன் பிளிச்சிங் பவுடர் கலந்து  தெளிக்கப்பட்டது” எனச் சலீம் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பானி, அதானிக்கான ‘ மத்திய அரசின் நாம் இருவர், நமக்கு இருவர் திட்டம் ’ – ராகுல் காந்தி

போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கியதில், ”அதிகாரிகள் உட்பட காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்” எனக் கொல்கத்தாவின் மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்திருப்பதாக, தி வயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின்ன் மிகப்பெரிய  மனித உரிமை அமைப்பான, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின்  துணைத் தலைவர் ரஞ்சித் சூர், ”மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்மீது காவல்துறை நடத்திய மிருகத்தனமான தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்குப் போட்டியாக மூன்றாவது அணியாக இடது சாரிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில், ஆளும் மாநில அரசிற்கு எதிராக இடது சாரிகள் இந்த ஆண்டில் முன்னெடுத்த முதல் போராட்டம் இது தான் என தி வயர் கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்