Aran Sei

உத்திரபிரதேச அரசு விளம்பரத்தில் மேற்கு வங்க பாலத்தின் புகைப்படம் – யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

த்திரபிரதேச அரசு விளம்பரத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள பாலத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் வெற்றிக்காக மேற்கு வங்க அரசின் பணிகளை அவரின் பணிகள் என யோகி ஆதித்யநாத் காட்டி வருவதாக அந்த கட்சி குற்றசாட்டியுள்ளது.
யோகி ஆதித்யநாத்தின் ஐந்து ஆண்டு ஆட்சியின் சாதனைகள் தொடர்பாக வெளியான முழுபக்க விளம்பரத்தில், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியில் கட்டப்பட்ட வெள்ளை நீல வர்ணம் பூசப்பட்ட ‘மா’ மேம்பாலத்தின் புகைப்படமும், அதில் மஞ்சள் நீறத்தில் டாக்சி பயணிப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.
நாளிதழில் வெளியான இந்த விளம்பரத்தைப் பகிரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், உத்திரபிரதேச அரசு மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினரும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி அவரது ட்விட்டர் பக்கத்தில், “யோகி ஆதித்யநாத்திற்கு உத்திரபிரதேசத்தை மாற்றுவது என்பது, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி உருவாக்கி உள்கட்டமைப்புகளின் புகைப்படங்களை திருடி அவருடையதாக பயன்படுத்திக் கொள்வது” என பதிவிட்டுள்ளார்.
மேலும், “பாஜக வலிமையாக இருக்கும் மாநிலத்தில், அவர்களின் இரட்டை இஞ்சின் திட்டம் தோல்வியடைந்துவிட்டது. அது தற்போது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சி அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “முதலமைச்சரின் பொய் மீண்டும் ஒருமுறை நிருபணமாகியுள்ளது. விளம்பரத்திற்காக மக்கள் பணத்தை தண்ணீரைப் போல செலவழித்தவர்களால், வளர்ச்சி என்ற பெயரில் காட்ட ஒன்றுமில்லை. இதனால், அவர்கள் கொல்கத்தாவில் இருந்து புகைப்படங்களைத் திருடிகிறார்கள். பாஜக அரசு பொய் கூறுவதில் முன்னணியில் உள்ளது, அதன் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது.” என பதிவிடப்பட்டுள்ளது.
Source : NDTV
 
 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்