Aran Sei

வலதுசாரி ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது – சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்டதால் காவல்துறை நடவடிக்கை

மூக வலைதளங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பேரறிஞர் அண்ணா,கலைஞர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட வலதுசாரி ஆதரவாளரும், யூடுயூப் பிரபலமுமான கிஷோர் கே.சாமியை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கல்வி சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் வலதுசாரிகள் – விரிவான அறிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு பரப்புவதாக கிஷோர் கே.சாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கடந்த 10 ம் தேதி காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.

இதனைதொடர்ந்து,கிஷோர் கே.சாமி மீது பிரிவு 153- (கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல்),பிரிவு 505(1)( b)- (அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல்),பிரிவு 505( 1) (c) – (ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது வழக்கு பதியப்பட்டிருந்து.

வரி மற்றும் வலதுசாரி அரசியலால் இந்தியாவை விட்டு வெளியேறும் செல்வந்தர்கள் – பிபிசி

இந்நிலையில், தாம்பரம் கிளை நீதிமன்றம் வரும் ஜூன் 28 வரை நீதிமன்றக்காவலில் வைக்க பிறப்பித்துள்ள உத்தரவின் பெயரில் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பெண் பத்திரிகையாளர்களின் தரக்குறைவாக விமர்சித்ததற்காக கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டு, சில மணி நேரங்களிலேயே விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

source; news 18 tamil

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்