Aran Sei

கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கம் முடக்கம் – பாஜக கூட்டணியில் ஃபேஸ்புக் நிறுவனம்?

credits : financial express

விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வந்த கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கம் ஃபேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து முடக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஃபேஸ்புக் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் பக்கசார்புடன் செயல்படுகிறது, தன்னுடைய வணிக நலன்களுக்காக குறிப்பிட்ட சில கட்சிகளை முன்னிறுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது ஏற்கனவே இருக்கிறது. இதற்கு உதாரணமாக, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை ஆதரிக்கும் ’ஆபத்தான அமைப்பு’ என்று பஜ்ரங் தளம், ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பை, ஃபேஸ்புக்கில், கருத்துக்களை பதிவு செய்வதில் இருந்து தடை செய்ய வேண்டும் என்று அந்த குழுவால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டு வெறுப்பை பரப்பும் ஃபேஸ்புக் நிறுவனம் – முன்னாள் ஊழியர் வாக்குமூலம்

ஃபேஸ்புக்கில் இயங்க பஜ்ரங் தளம் அமைப்புக்கு தடை விதிப்பதென்பது இந்தியாவில் ஃபேஸ்புக்கின் வணிக வாய்ப்புகளை பாதிப்படைய செய்வது மட்டுமின்றி, இந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களும் அதிகாரிகளும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த நபர்களால் உடல் ரீதியான தாக்குதல்களை கூட சந்திக்க நேரலாம் என பாதுகாப்புக் குழுவால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படும் பஜ்ரங் தளம் – தடை செய்ய அச்சப்படும் ஃபேஸ்புக் நிறுவனம்

இதையடுத்து இந்தியாவின் ஃபேஸ்புக் தலைவர் அஜித் மோகன் நாடாளுமன்ற நிலைக்குழுவால் விசாரிக்கப்பட்டுள்ளார். அப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஷி தரூர் மற்றும் கார்த்திக் சிதம்பரம் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியை சுட்டிக்காட்டி பஜ்ரங் தளம் அமைப்பை ஃபேஸ்புக்கில் தடை செய்தால் நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் பாதிப்பும் ஏற்படும் என அஞ்சி, பஜ்ரங் தளம் அமைப்பை ஃபேஸ்புக்கில் தொடர்ந்து செயல்பட அனுமதியளித்திருப்பது குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

பஜ்ரங் தளத்தை ஃபேஸ்புக்கில் தடை செய்யாதது ஏன்? – நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி

இதற்கு பதிலளித்த ஃபேஸ்புக் தலைவர் அஜித் மோகன், ஃபேஸ்புக்கின் உண்மை அறியும் குழுவின் ஆய்வில், பஜ்ரங் தளத்தின் பதிவுகள் எதுவும் ஃபேஸ்புக்கின் சமூக வலைதள விதிமுறைகளுக்கு எதிராக இல்லை என்று பதிலளித்துள்ளார். மேலும் இந்நிறுவனம் அனைத்து வகையான வெறுப்பு பிரச்சாரங்களையும் கண்டிப்பதாகவும், ஃபேஸ்புக் நிறுவனம் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் சார்பானது இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.

‘இந்தியாவிடம் ஃபேஸ்புக் பொய் சொல்கிறதா’ – ராகுல் காந்தி கேள்வி

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்திவரும் தொடர் போராட்டத்தை, சமூக ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வந்த அவர்களின் பக்கமான கிசான் ஏக்தா மோர்ச்சா (1,00,000 பின் தொடர்பாளர்கள் உள்ளனர்) ஃபேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது.

இது சமூக வலைதளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பஜ்ரங் தளத்தின் பதிவுகளை நீக்க போதிய காரணங்கள் இல்லை என ஃபேஸ்புக் நிறுவனம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் கூறியதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“பாஜகவின் கூட்டணியான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறையுடன் புதிதாக தற்போது ஃபேஸ்புக்கும் இணைந்துள்ளது” என பத்திரிகையாளர் ரோகினி சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது போன்று பலர் சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக்கின் செயல்பாடு குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். இதையடுத்து முடக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கிசான் ஏக்தா மோர்ச்சர் ஃபேஸ்புக் பக்கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

https://www.facebook.com/kisanektamorcha

கிசான் ஏக்தா மோர்ச்சா மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது, சிரமத்து மன்னிக்கவும் என ஃபேஸ்புக்கின் செய்தி தொடர்பாளர் கூறியதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய வணிக நலன்களுக்காக பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் அந்நிறுவனத்தின் முன்னால் நிர்வாகி அங்கி தாஸ், இஸ்லாமிய விரோத கருத்துக்களை முன்வைத்த பாஜக தலைவருக்காக பரப்புரை செய்தததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னர் அவர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்